ஜி-4 பன்றிக் காய்ச்சல் வைரஸ் எளிதில் மனிதர்களுக்கு பரவாது!

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
பீஜிங்: சீனாவில் பன்றிகளில் காணப்படும் ஜி-4 வைரஸ் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இவ்வைரஸ் எளிதில் மனிதர்களுக்கு பரவாது என கூறி அந்த ஆய்வை சீன அரசு மறுத்துள்ளது.சீன விஞ்ஞானிகள் அமெரிக்க ஆய்விதழில் வெளியிட்ட தங்கள் கட்டுரையில், ஜி 4 என்ற புதிய பன்றிக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களிடம் பரவி, பின்னர் பெருந்தொற்றாக

இந்த செய்தியை கேட்க

பீஜிங்: சீனாவில் பன்றிகளில் காணப்படும் ஜி-4 வைரஸ் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இவ்வைரஸ் எளிதில் மனிதர்களுக்கு பரவாது என கூறி அந்த ஆய்வை சீன அரசு மறுத்துள்ளது.latest tamil newsசீன விஞ்ஞானிகள் அமெரிக்க ஆய்விதழில் வெளியிட்ட தங்கள் கட்டுரையில், ஜி 4 என்ற புதிய பன்றிக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களிடம் பரவி, பின்னர் பெருந்தொற்றாக மாறக்கூடும் என எச்சரித்திருந்தனர். இந்த ஆய்வு ஊடகங்களால் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றும், உண்மைத் தன்மையற்றது என்றும் சீனாவின் வேளாண் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை சீன வேளாண் பல்கலைக்கழகத்தின் பன்றி வைரஸ் நோய் விஞ்ஞானி யாங் ஹஞ்சூன் எழுதியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்படுள்ளதாவது: தற்போது பிரசுரமான ஆய்வு மிகவும் சிறியளவிலான சோதனை ஆகும். கட்டுரையில் ஜி 4 வைரஸ் பன்றிகளிடையே ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைக் காட்ட போதுமான ஆதாரங்கள் இல்லை. ஜி 4 வைரஸ் பன்றி தொழில் மற்றும் பொது சுகாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஒரு கருத்தரங்கை நடத்திய பின்னர் இந்த முடிவுக்கு வந்தோம்.


latest tamil newsஇந்த கருத்தரங்கில் ஜி-4 வைரஸ் பற்றி கட்டுரை வெளியான அதே ஆய்விதழைச் சேர்ந்த முன்னணி ஆசிரியர்கள், வைரஸ் எதிர்ப்பு நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள் பங்கேற்றனர். அவர்கள் ஜி 4 வைரஸ் புதியதல்ல என்று ஒப்புக் கொண்டனர். மேலும், 2011-ம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பு மற்றும் சீன விஞ்ஞானிகள் தொடர்சியாக இவ்வைரஸை கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - india,இந்தியா
05-ஜூலை-202005:35:47 IST Report Abuse
Karthik எப்பொழுதும் மனித நோய்களின் பிறப்பிடம் சீனா நாடாகத்தான் உள்ளது. சீன அரசு 2049-இல் தன்னை ஒரு பெரிய வல்லரசு நாடாக திகழ பல யுக்தியையை கடைபிடித்து. மற்ற நாடுகளை வீழ்த்த பார்க்கிறது. இதற்கு மற்ற நாடுகளும் உலகை சார்ந்த அமைப்புகளும் சீனாவை தனிமைப்படுத்தி சரியான தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
04-ஜூலை-202022:37:59 IST Report Abuse
தல புராணம் சீனா இதை மறைக்கவில்லை. கட்டுரை வெளியிட்டதே அவர்களின் விஞ்ஞானிகள் தான்.
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
05-ஜூலை-202003:39:10 IST Report Abuse
Venkatesh@thala puranam, nee oru mudhugil kuthum manithan pola irukku, china kaaran panra, pannugindra thappai ellathayum marandhu unnala avanukku ippadi pesa mudiyudhu, un design appadi pola, nee yellam naattukkum, veettukkum perum bharam. Un sindhanayai maatrum vazhiyai mudhalil thedu....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
04-ஜூலை-202022:37:44 IST Report Abuse
தல புராணம் உலகில் கொரோனா வைரஸ் தாண்டவமாடும் போது நம்ம தல, சாணிக்கியனோட சேர்ந்து எந்த ஆட்ச்சியை கவுக்கலாமுன்னு திட்டம் போட்டுக்கிட்டு இருந்தாப்புலே.. G4 க்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கா என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X