பொது செய்தி

தமிழ்நாடு

டிரான்ஸ்பார்மரில் சிக்கி உயிரிழந்த பெண் மயிலுக்கு போலீசார் தேசிய கொடி போர்த்தி மரியாதை

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

கோவை: டிரான்ஸ்பார்மரில் சிக்கி உயிரிழந்த பெண் மயிலுக்கு போலீசார் தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர்.



latest tamil news



கோவை எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பகுதியில் அதிகளவில் மயில்கள் சுற்றி வருகின்றன. உணவு மற்றும் குடிநீருக்காக இவை குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. இவ்வாறு வரும் மயில்கள் வாகனங்களில் அடிப்பட்டு, மின்கம்பிகளில் சிக்கி உயிரிழக்கின்றன.


இந்நிலையில்எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பகுதியில் மூன்று வயதுடைய பெண் மயில் ஒன்று குடியிருப்புகளுக்கு நடுவே சுற்றி வந்தது. குடியிருப்பின் ஒரு பகுதியில் இருந்த மற்றொரு பகுதிக்கு பறந்து செல்ல முயன்ற போது அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் எதிர்பாராத விதமாக சிக்கியது. இதில் மயிலின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மயில் உடல் கருகி உயிரிழந்தது.


latest tamil news




இதுகுறித்து எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியை சேர்ந்த சிலர் சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற சிங்காநல்லுார் போலீசார் மயில் தேசிய பறவை என்பதால், அதற்கு தேசிய கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மயிலின் சடலத்தை மதுக்கரை வனச்சரகரிடம் ஒப்படைத்தனர். வன அலுவலர்கள் மதுக்கரை வனப்பகுதியில் மயிலின் சடலத்தை அடக்கம் செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஜூலை-202004:07:17 IST Report Abuse
J.V. Iyer பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
04-ஜூலை-202023:40:23 IST Report Abuse
Girija வனத்துறை என்னதான் செய்கிறது ? வாயில் புண் வந்த யானையை காப்பாற்ற முடியவில்லை, தரையில் சோர்ந்து ஒரே இடமாக படுத்திருந்த யானையை கூட காப்பாற்ற முடியவில்லை. மயில்களுக்கு முறையாக உணவு தண்ணீர் வழங்கி பாதுகாப்பாக வேலி அமைக்கமுடியவில்லை , அரசு அலுவலகங்களில் இருக்கும் சந்தன மரத்தை பாதுகாக்க முடியவில்லை , மான் வேட்டை முயல் வேட்டை யை தடுக்க முடியவில்லை . காட்டில் நிறைய வீரப்பண்கள் தொந்திரவிட்டனரா ?
Rate this:
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
04-ஜூலை-202023:31:18 IST Report Abuse
Vaduvooraan இந்த போலீஸ் இப்படி..அங்க சாத்தான்குளத்துல வேறுமாதிரி போலீஸ்...எது உண்மையான முகம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X