டிரான்ஸ்பார்மரில் சிக்கி உயிரிழந்த பெண் மயிலுக்கு போலீசார் தேசிய கொடி போர்த்தி மரியாதை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டிரான்ஸ்பார்மரில் சிக்கி உயிரிழந்த பெண் மயிலுக்கு போலீசார் தேசிய கொடி போர்த்தி மரியாதை

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (5)
Share
கோவை: டிரான்ஸ்பார்மரில் சிக்கி உயிரிழந்த பெண் மயிலுக்கு போலீசார் தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர். கோவை எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பகுதியில் அதிகளவில் மயில்கள் சுற்றி வருகின்றன. உணவு மற்றும் குடிநீருக்காக இவை குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. இவ்வாறு வரும் மயில்கள் வாகனங்களில் அடிப்பட்டு, மின்கம்பிகளில் சிக்கி உயிரிழக்கின்றன. இந்நிலையில்எஸ்.ஐ.எச்.எஸ்.,

கோவை: டிரான்ஸ்பார்மரில் சிக்கி உயிரிழந்த பெண் மயிலுக்கு போலீசார் தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர்.



latest tamil news



கோவை எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பகுதியில் அதிகளவில் மயில்கள் சுற்றி வருகின்றன. உணவு மற்றும் குடிநீருக்காக இவை குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. இவ்வாறு வரும் மயில்கள் வாகனங்களில் அடிப்பட்டு, மின்கம்பிகளில் சிக்கி உயிரிழக்கின்றன.


இந்நிலையில்எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பகுதியில் மூன்று வயதுடைய பெண் மயில் ஒன்று குடியிருப்புகளுக்கு நடுவே சுற்றி வந்தது. குடியிருப்பின் ஒரு பகுதியில் இருந்த மற்றொரு பகுதிக்கு பறந்து செல்ல முயன்ற போது அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் எதிர்பாராத விதமாக சிக்கியது. இதில் மயிலின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மயில் உடல் கருகி உயிரிழந்தது.


latest tamil news




இதுகுறித்து எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியை சேர்ந்த சிலர் சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற சிங்காநல்லுார் போலீசார் மயில் தேசிய பறவை என்பதால், அதற்கு தேசிய கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மயிலின் சடலத்தை மதுக்கரை வனச்சரகரிடம் ஒப்படைத்தனர். வன அலுவலர்கள் மதுக்கரை வனப்பகுதியில் மயிலின் சடலத்தை அடக்கம் செய்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X