சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசார் மதுரை சிறைக்கு மாற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசார் மதுரை சிறைக்கு மாற்றம்

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (6)
Share

திருநெல்வேலி:சாத்தான்குளம் சம்பவத்தில் கைதாகி பேரூரணி சிறையில் இருந்த இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட 5 போலீசாரும் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை சிறைக்கு மாற்றப்படுகின்றனர்.



latest tamil news



துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் 60, மகன் பென்னிக்ஸ்31, கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி.,போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீஸ் ஏட்டு முருகன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த போலீஸ் ஏட்டு முத்துராஜ்நேற்று முன்தினம் இரவில் விளாத்திகுளம் அருகே பூசனுாரில் கைது செய்யப்பட்டார். இரவில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று காலையில் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சி.ஜே.எம்.,கோர்ட் மாஜிஸ்திரேட் ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.விசாரணை குறித்து சி.பி.சி.ஐ.டி.,ஐ.ஜி.,சங்கர் கூறுகையில், வழக்கில் தேவையான தடயங்கள், ஆதாரங்கள், ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. சி.சி.டி.வி.,காணொளி பதிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள். சாத்தான்குளம் ஸ்டேஷனில் சம்பவத்தன்று இருந்த போலீஸ் நண்பர்கள் குழுவையும் விசாரிப்போம். மேலும் தகவல்களுக்காக தற்போது சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஐந்துபேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம் என்றார்.


latest tamil news



மதுரை சிறைக்கு மாற்றம்:

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதாகியுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகிய ஐந்து பேரும் துாத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற சிறை நிர்வாகம் முடிவெடுத்ததால் நேற்று ஐந்துபேரும் மதுரை சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.


சர்சைக்குரிய கார்:



சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, திருநெல்வேலியில் இருந்து தேனிக்கு காரில் செல்வதாக தகவல் கிடைத்தது. போலீசார் கங்கைகொண்டான் செக்போஸ்ட்டில் அந்த காரை மடக்கி அவரை கைது செய்தனர். தற்போது அந்த கார் சர்ச்சைக்குரியதாகியிருக்கிறது. டிஎன் 10 ஏஎச் 2304 என்ற ஷிப்ட் கார், சென்னை முகப்பேரை சேர்ந்த சுரேஷ்குமா் என்பவருக்கு சொந்தமானது.

அவர் திருநெல்வேலியை சேர்ந்த கந்துவட்டி நபரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு அடகுவைத்துள்ளார். ஆனால் மீட்கவில்லைகாரை வாங்கியவர், கந்துவட்டி வழக்கில் சென்னை புழல் சிறையில் உள்ளார். எனவே காரை தற்போது வைத்திருப்பவர், இன்ஸ்பெக்டருக்கு உறவினரா என்பன போன்ற விபரங்களையும் போலீசார் சேகரித்தனர். கார் தற்போது கங்கைகொண்டான் போலீிஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X