ராஜஸ்தானில் புதிதாக 204 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020
Share
Advertisement
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கொரோனா தொற்று அதிகரித்து இன்று மேலும் 204 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 3 பேர் பலியாகினர் என அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹா.,முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் நோய் தொற்று காரணமாக, இன்று மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கொரோனா தொற்று அதிகரித்து இன்று மேலும் 204 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 3 பேர் பலியாகினர் என அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹா.,முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் நோய் தொற்று காரணமாக, இன்று மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 19,256 ஆகஉயர்ந்தது. நோய் தொற்றுக்கு பரத்பூர் , ஜுன்ஜுனு மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 3 நகரங்களில் தலா ஒருவர் பலியாகினர். ராஜஸ்தானில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 443 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



மாநிலத்தின் நோய் பாதிப்புகளில் இருந்து 15,352 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3,461 பேர் மாநிலத்தில் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக நோய் பாதிக்கப்பட்ட நபர்களில், 36 பேர் பார்மரில் இருந்தும், 25 பேர் பீகானீரில் இருந்தும், நாகரில் 23 பேர், தோல்பூர் மற்றும் பாலியில் தலா 21 பேர், ஜெய்ப்பூரில் 17 பேர், துங்கர்பூரில் 13 பேர், ஜூன்ஜூனு மற்றும் ஜலூரில் தலா 11 பேர், கோட்டாவில் 8 பேர், உதய்பூரில் 4 பேர், பரத்பூர், கரவுலி மற்றும் தவுசாவில் தலா 3 பேர், ராஜ்சமந்த் மற்றும் சவாய்மதோபூரில் தலா ஒருவர் அடங்குவர். மேலும் வெளிமாநிலங்களை சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X