பொது செய்தி

இந்தியா

கொரோனா மைய வார்டுகளுக்கு கல்வானில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர் சூட்ட முடிவு

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி: புதுடில்லி சர்தார்பூரில் உள்ள உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தின் வார்டுகளுக்கு கல்வான் மோதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்களைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



டில்லி சர்தார்பூரில் ராதா சோமி சத்சங்க பியாஸ் வளாகத்தில் பத்தாயிரம் படுக்கைகளைக் கொண்ட உலகின் மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர், மத்திய ஆயுதக் காவல் படையினர், மருத்துவர்கள் இணைந்து இதை நடத்தி வருகின்றனர்.


latest tamil news



இந்த மருத்துவமனையில் உள்ள வார்டுகளுக்கு கல்வான் மோதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெயர்களைச் சூட்டுவதற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது. பிரதமர் மோடி லேக்குச் சென்று ராணுவ வீரர்களை சந்தித்து எழுச்சி உரையாற்றி திரும்பியுள்ள நேரத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
05-ஜூலை-202009:43:27 IST Report Abuse
Balasubramanian Ramanathan அற்புதம். வளமான சிந்தனை. முடிவெடுத்தவர்களுக்கு நன்றி. தெரு சந்திலிருந்து சத்தியமங்கலம் வரை நேரு குடும்ப பெயரை வைத்தாகிவிட்டது. கேட்டு கேட்டு புளித்து விட்டது. நல்லதோர் மாற்றம்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
05-ஜூலை-202008:18:59 IST Report Abuse
மலரின் மகள் மீண்டும் பள்ளி கல்லூரிகளில் NCC பெரியளவில் உருவாக்கி, அந்த விங்குக்கு வீரமரணமடைந்த ராணுவ வீரர்கள் பெயரை சூட்டலாம்.
Rate this:
Cancel
Bond - Gujarat,இந்தியா
05-ஜூலை-202000:37:39 IST Report Abuse
Bond கல்வானில் சீன ஊடுருவல் இல்லை , இதை சொன்னது பிரதமர் மோடி . பிறகு எப்படி இருபது ராணுவ வீரர்கள் இறந்தார்கள் , அவர்கள் பெயரை மருத்துவமனைக்கு சூட்டுவது , ஒன்னுமே புரியாலையே .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X