கொரோனா மைய வார்டுகளுக்கு கல்வானில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர் சூட்ட முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா மைய வார்டுகளுக்கு கல்வானில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர் சூட்ட முடிவு

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி: புதுடில்லி சர்தார்பூரில் உள்ள உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தின் வார்டுகளுக்கு கல்வான் மோதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்களைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.டில்லி சர்தார்பூரில் ராதா சோமி சத்சங்க பியாஸ் வளாகத்தில் பத்தாயிரம் படுக்கைகளைக் கொண்ட உலகின் மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை இந்தோ திபெத்

புதுடில்லி: புதுடில்லி சர்தார்பூரில் உள்ள உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தின் வார்டுகளுக்கு கல்வான் மோதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்களைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



டில்லி சர்தார்பூரில் ராதா சோமி சத்சங்க பியாஸ் வளாகத்தில் பத்தாயிரம் படுக்கைகளைக் கொண்ட உலகின் மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர், மத்திய ஆயுதக் காவல் படையினர், மருத்துவர்கள் இணைந்து இதை நடத்தி வருகின்றனர்.


latest tamil news



இந்த மருத்துவமனையில் உள்ள வார்டுகளுக்கு கல்வான் மோதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெயர்களைச் சூட்டுவதற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது. பிரதமர் மோடி லேக்குச் சென்று ராணுவ வீரர்களை சந்தித்து எழுச்சி உரையாற்றி திரும்பியுள்ள நேரத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X