பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் தான் என்னை சமமாக நடத்தியது!

Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
 தமிழகம் தான் என்னை சமமாக நடத்தியது!

ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா, சிடோ கன்ஹு முர்மு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் சோனாஜரியா மின்ஸ்: பீஹார் மாநிலம், ஓரான், என் சொந்த கிராமம். என் அப்பா, நிமல் மின்ஸ், ஜார்க்கண்டின் பிரபல சுதந்திரப் போராட்ட வீரர். நாங்கள் பேசும் மொழி, 'குறுக்!'தமிழுக்கும், எங்கள் மொழிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. கண், உட்காரு போன்ற, தமிழ் வார்த்தைகளின் பொருள், எங்கள் மொழியிலும் ஒன்று தான்.

எங்கள் ஊர் முழுக்க, தென் மாநிலங்கள் போல, திராவிட முகங்களே தென்படும்.ராஞ்சியிலுள்ள ஒரு தனியார் கிறிஸ்துவப் பள்ளியில் படித்தேன். அந்தப் பள்ளியில், என்னையும் சேர்த்து, நிறைய ஆதிவாசி மாணவர்கள் பயின்று வந்தனர். என்ன தான் நான் எப்போதும், நன்கு படித்து, நல்ல, 'ரேங்க்' வாங்கினாலும், நான் ஆதிவாசிப் பெண் என்பதால், என் ஆசிரியர்களே எனக்கு மிகவும் தொல்லை கொடுப்பர். வீட்டில் பொருளாதாரச் சிக்கல் இருந்தாலும், எல்லாரும் படித்தவர்கள். என் அப்பா நண்பர் ஒருவரின் தயவில், ஸ்காலர்ஷிப்பில், சென்னை விமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜில் இளங்கலையும், மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் முதுகலையும் முடித்தேன். தென் மாநிலங்களில் ஜாதி பாகுபாடு இருந்தாலும், என் கல்லுாரிகளில் படிக்க, நல்ல சூழலே அமைந்தது. நான் ஒரு ஆதிவாசிப் பெண் என்பதைக் கல்லுாரியிலும், பொது வெளியிலும் சொல்லிக் கொண்டதே இல்லை.

துணைவேந்தர் அறிவிப்பு வந்த பின்பு தான் நான், ஆதிவாசி இனப் பெண் என்பது, என் கல்லுாரி நண்பர்களுக்கே தெரியும்.மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் மற்றும், ஜே.என்.யூ.,வில், துணை பேராசிரியையாக பணியாற்றிஉள்ளேன். ஒடுக்கப்பட்டு வாழ்ந்து வந்த என்னை, முதன் முதலில் தமிழகம் தான் சரிசமமாகப் பார்த்தது. உண்மையில், தமிழகத்தில் தான் நிறைய கற்றுக் கொண்டேன்.

கல்லுாரியில் ஹாக்கி விளையாடுவேன். அப்போது இருந்த, இந்திய அணியில் பீஹார் பெண்கள் நிறைய இருந்ததால், என்னையும் ஊக்குவித்தனர். நானும் விளையாடி, தமிழக ஹாக்கி அணியின், 'வெயிட்டிங் லிஸ்டில்' கூட இருந்தேன். பின், அந்தப் பாதை மிகவும் கடினம் என்பதால், விட்டுவிட வேண்டியதாயிற்று. வட மாநிலங்களில், என் குடும்பப் பெயரைப் பார்த்த உடனே, ஆதிவாசி என்று கண்டுபிடித்து விடுவர்.

ஆனால், தமிழகத்தில் அப்படியில்லை; சுதந்திரப் பறவையாக இருந்தேன். தமிழகத்திற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அது போலவே, தமிழகத்தில் தான், முதன்முதலாக, 'ஈவ் டீசிங்' போன்ற கசப்பான அனுபவங்களையும் அனுபவித்திருக்கிறேன்!

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rishi - varanasi,இந்தியா
11-ஜூலை-202013:05:21 IST Report Abuse
rishi பிராமண சாதியை மட்டும் எதிர்த்த ராமசாமி நாயக்கர் வேற எந்த சாதியையும் எதிர்க்கவில்லை, இன்னும் சாதி ஆழமாக இருக்கிறது. ராமசாமி நாயக்கர் ஒன்னும் பெருசா கிழிக்கல, பெரியார் மண், சொறியார் மண் எதுவும் எடுபடாது. இது சித்தர்களின் பூமி , புண்ணிய பூமி , ஆன்மிக பூமி , வள்ளலார் மண் , அகத்தியர் மண் ...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-ஜூலை-202015:49:22 IST Report Abuse
Bhaskaran இது பெரியாரின் மண் என்று கழகத்தினர் சொல்வார்கள் .
Rate this:
Cancel
TechT - Bangalore,இந்தியா
07-ஜூலை-202011:57:16 IST Report Abuse
TechT என்ன தமாஷ்? தமிழகத்தில் ஓரளவு பரவாயில்லை என்கிறார் இவர். சந்தோசப்படணும். பெயருக்கு பின் ஜாதி பெயர் இங்கு பெரும்பாலும் கிடையாது (ஒருசிலர் இப்போதும் ஜாதி பெயர் பெயருக்கு பின்னால் உண்டு-உங்கள் பெயர் போல). ஆனால் eve teasing இங்கு அதிகம் என்கிறார், தமிழ் சினிமாவால் வந்த வியாதி அது. நல்லவைகளை தமிழகம் continue செய்யவேண்டும் ( ஜாதி பெயர் வேண்டாம் ) தவறுகளை கேட்ட விஷயங்களை மற்ற வேண்டும் ( சினிமா மோகம்...ரஜினி போன்றவரின் influence on young people not good).
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X