பொது செய்தி

இந்தியா

வீரர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை :ராணுவம் விளக்கம்

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி சீனா உடனான சம்பவத்தில் காயமடைந்த வீரர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.



latest tamil news



கடந்த சில தினங்களுக்கு முன்னர் லடாக் பகுதியில் கல்வான் என்னுமிடத்தில் சீனா இந்தியா இடையே பதற்றம் உருவானது. இச்சம்பவத்தில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் சில வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் லே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பிரதமர் மோடி திடீர் பயணமாக லடாக் பகுதிக்கு சென்று ராணுவவீரர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் குறைபாடு உள்ளதாக புகார் எழுந்தது. இதனை மறுத்துள்ள இந்திய ராணுவம் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது. அதில் காயம் அடைந்த வீரர்களுக்குமுறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற செய்தி அனைத்தும் ஆதாரமற்றவை. இவை அனைத்தும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் பரப்பபடுகிறது.


latest tamil news



பிரதமர் மோடி ஆய்வு செய்த மருத்துவமனையில் வீரர்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. பிரதமர் சந்தித்த இடம் மருத்துவமனையே இல்லை என்றும் மருத்து வசதிகள் எதுவும் இல்லை என கூறுவதில் எதுவும் உண்மையில்லை. அதே நேரத்தில் கொரோனா தொற்றுக்கான வழிகாட்டுதல் படி மருத்துவமனையில் உள்ள பயிற்சி கருத்தரங்கம் தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்பட்டதே உண்மை இவ்வாறு ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-ஜூலை-202005:08:25 IST Report Abuse
வெகுளி மருத்துவமனையில் வீரர்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது என்பதை அனுபவத்தில் உணர அவதூறு கூறுபவர்கள் தற்செயலாக பாத்ரூமில் வழுக்கி விழுந்து சிகிச்சை பெற்றால் புரியும் ....
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-ஜூலை-202011:09:22 IST Report Abuse
Malick Raja எதிரி நாடுகளான சீனா ,பாக், நேபாளம் இந்திய எல்லையில் விளையாடலாம் . உள்ளே நுழைந்தால் இந்திய ராணுவம் அவர்களை துவம்சம் செய்துவிடும். இதுதான் உண்மை .. போர் வந்தால் இராணுவமே பிரதானமாக இருக்கும் ..
Rate this:
Cancel
Thiru, Coimbatore - Coimbatore,இந்தியா
04-ஜூலை-202023:56:18 IST Report Abuse
Thiru, Coimbatore நீங்க (இந்திய ராணுவம்) எதுக்கு சார் கண்டவங்களுக்கு எல்லாம் விளக்கம் கொடுக்கணும்.. மோடி எதச் செய்தாலும் அத எதிர்க்கனும் அப்டீங்கற முட்டாள்களுக்கு விளக்கம் குடுத்து உங்க தியாகத்தை வீணாக்க வேண்டாம்... ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான் 🇮🇳🇮🇳🇮🇳❣🙏
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X