தெலுங்கானாவில் மேலும் 1,892 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து 1,892 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 8 பேர் பலியாகினர் என அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. ஐதராபாத் மண்டலங்களில் தான் நோய் பாதிப்பு பெருமளவில் உள்ளது. பாதிப்புகளை கட்டுப்படுத்த முதல்வர் சந்திரசேகர ராவ் அரசு பல்வேறு கட்டமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்,அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் (நேற்று) 1,892 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 20,462 ஆக உயர்ந்தது. நோய் தொற்றுக்கு புதிதாக 8 பேர் பலியாகினர். தெலுங்கானாவில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 1,658 பேர் ஐதராபாத் நகரத்தை (GHMC) சேர்ந்தவர்கள். நேற்று முன்தினம், 1,126 பேர் குணமடைந்தனர். இதுவரை 10,195 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில், ரங்காரெட்டியில் 56 பேர், மேட்சலில் 44 பேர், வாரங்கல் (கிராமபுறம்) 41 பேர், சங்காரெட்டியில் 20 பேர், நல்கொண்டாவில் 13 பேர், மஹபூப்நகரில் 12 பேர், மஹபூப்பாத்தில் 7 பேர், சிர்சில்லா மற்றும் கமாரெட்டியில் 6 பேர், வனபார்த்தியில் 5 பேர், கோத்தகுடத்தில் 4 பேர், சித்திபேட்டை, மெடாக் மற்றும் நிஜாமாபாத்தில் தலா 3 பேர், கம்மம் மற்றும் நிர்மலில் தலா 2 பேர், கரீம்நகர், கட்வால், முலுகு, ஜக்தியால், வாரங்கல் (நகர்புறம்) , நாகர்கர்னூல், விக்ராபாத்தில் தலா ஒருவர் அடங்குவர். கடந்த 24 மணிநேரத்தில் 5,965 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. மாநிலத்தில் மொத்தமாக 1,04,118 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X