பொது செய்தி

இந்தியா

ஆக.,15க்குள் 'கொரோனா' தடுப்பூசியா? அவசரம் வேண்டாம் என எச்சரிக்கை

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
ஆக.,15க்குள் 'கொரோனா' தடுப்பூசி,அவசரம் வேண்டாம்,

புதுடில்லி : 'கொரோனா' வைரசுக்கான தடுப்பூசி, ஆக., 15க்குள் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு குறித்து, 'ரொம்ப அவசரப்பட வேண்டாம்' என, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரசுக்கு, தடுப்பூசி மற்றும் மருந்து இல்லாத நிலையில், 'கோவாக்சின்' என்ற, புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அறிமுகம்தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையம் ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளன.இதை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்வதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்துள்ளது.'வரும், 7ம் தேதிக்குள் இதற்கான பணிகளை துவக்க வேண்டும், ஆக., 15ல் நாட்டின் சுதந்திர தினத்தன்று, இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்ய வேண்டும்' என, ஐ.சி.எம்.ஆர்., கூறியுள்ளது. அதேபோல், குஜராத் மாநிலம் ஆமதாபாதைச் சேர்ந்த, 'சைடஸ் காடிலா' மருந்து தயாரிப்பு நிறுவனமும், புதிய தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்து உள்ளது.

இதை, மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய அனுமதி பெற்றுள்ளதாகவும், அந்த நிறுவனம் கூறியுள்ளது.'இதன் மூலம், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி, உள்நாட்டு தொழில்நுட்பத்துடன், உலகிலேயே முதல் முதலாக நம் நாட்டில் அறிமுகம் செய்யப்படும்' என, கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக, பிரபல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள், தொற்றுநோய் விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது: தடுப்பூசி பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 12 மையங்களுக்கு, ஐ.சி.எம்.ஆர்., கடிதம் எழுதியுள்ளது.


பரிசோதனைஅதில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள், இந்த மையங்களுக்கு மிகுந்த நெருக்கடி கொடுப்பதை போல் உள்ளது. வேகவேகமாக பரிசோதனைகளை செய்யும்படி நிர்ப்பந்தம் செய்வது போல் அந்தக் கடிதம் அமைந்துள்ளது.ஆக., 15ல் அறிமுகம் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்படுவது பாராட்டுக்குரியது. வேகம் இருக்க வேண்டும்; அந்த வேகம், பரிசோதனை நிபந்தனைகளை, வழிமுறைகளை மீறுவதாக அமைந்து விடக் கூடாது.வழக்கமாக, இது போன்று புதிதாக தடுப்பூசிகள் தயாரிக்கும்போது, அது பாதுகாப்பானதா, சிறந்த பலனை அளிக்கிறதா, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவ வழிகாட்டுதலின்படி, மூன்று கட்டங்களாக பரிசோதனைகள் நடைபெற வேண்டும். முதலில், சிறிய அளவில், குறைந்த எண்ணிக்கையில், இந்த மருந்தை அளித்து, அது பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.இரண்டாம் கட்டத்தில், சில நுாறு பேருக்கு இந்த மருந்தை அளித்து, அது சிறப்பாக செயல்படுகிறதா, சிறந்த பலனை அளிக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அதற்கடுத்து, மூன்றாவது கட்டத்தில், சில ஆயிரம் பேருக்கு மருந்து அளித்து, இந்த மருந்து எவ்வளவு காலத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது என்பது உள்ளிட்டவற்றை ஆராய வேண்டும்.


நிர்ப்பந்தம் வேண்டாம்அதன்படி பார்த்தால், ஒரு புதிய தடுப்பூசிக்கான பரிசோதனை காலம், 12 - 18 மாதங்களாக இருக்கும். ஆனால், இன்னும் ஒரு மாதத்துக்குள் இந்த பரிசோதனைகளை செய்ய அவசரம் காட்ட வேண்டியதில்லை. தற்போது, இந்த தடுப்பூசிக்கான பரிசோதனை வேகம் எடுத்துள்ளது. அந்த வேகத்தின் அளவு குறையாமல், உரிய முறைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அவசரம் மற்றும்நிர்ப்பந்தம் வேண்டாம்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand K - chennai,இந்தியா
05-ஜூலை-202022:31:11 IST Report Abuse
Anand K ok
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
05-ஜூலை-202016:32:45 IST Report Abuse
Sivagiri வாட் நான்சென்ஸ். ? இந்தியாவில் கண்டுபிடிப்பா ? - கம்யூனிஸ்டுகள் - மற்றும் அமெரிக்க-ஐரோப்பிய ஆதரவாளர்கள் - மைன்ட் வாய்ஸ் . . . அதுவும் பாஜக இருக்கும் போதா ? இது ராகுல் மற்றும் வெள்ளைக்காரனாகி விட்டதாக மனப்பால் குடிக்கும் மதமாற்ற கும்பல்களின் மைன்ட் வாய்ஸ் . .
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
05-ஜூலை-202014:47:19 IST Report Abuse
Darmavan suthasi marunthin ethirigal intha aangila marunthu nibunargal./throgigal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X