நேபாளம் பிரதமருக்கு நெருக்கடி? : அதிபரை சந்தித்து ஆலோசனை

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 Nepal Prime Minister KP Sharma    to meet President Bidhya Devi Bhandari

காத்மாண்டு: நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியை பதவி விலகுமாறு கூறி ஆளும் நேபாள கம்யூ., கட்சி தலைவர்கள் போர்க்கொடி துாக்கி வரும் நிலையில் அதிபர் தேவி பண்டாரியை பிரதமர் ஒலி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நேபாளம் பிரதமர் கே.பி. ஷர்மா தன்னை பதவியில் இருந்த நீக்க இந்தியா முயற்சிப்பதாக சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். கடந்த ஜூலை 30-ல் நேபாள கம்யூ., கட்சியின் நிலைக் குழு கூட்டம் பலுவடாரில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த புஷ்ப கமல் பிரசண்டா, பிரதமரின் பேச்சு, இந்தியா உடனான உறவை சீர்குலைக்கும்' என எச்சரித்தார். இதையடுத்து இந்தியா மீதான புகாருக்கு ஆதாரம் தர முடியவில்லையெனில் பதவி விலகுமாறு ஷர்மாவை பிரசண்டா கேட்டுக் கொண்டார்.


latest tamil news



இந்நிலையில் காத்மாண்டுவில் உள்ள அதிபர் மாளிகையான ஷீத்தல் மாளிகை சென்ற பிரதமர் ஷர்மா அதிபர் தேவி பண்டாரியை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் மூலம் நோபளம் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்படுவதற்கான அறிகுறி தென்படத்துவங்கியுள்ளது.


சமூக இடைவெளியில் அமைச்சரவை கூட்டம்



முன்னதாக பிரதமர் ஷர்மா ஒலி, அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். நேபாளில் கொரோனா பாதிப்பு உள்ளதையடுத்து சமூக இடைவெளியை பின்பற்றி அமைச்சரவை கூட்டம் நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
05-ஜூலை-202009:58:13 IST Report Abuse
Lion Drsekar உலகிலேயே இந்துக்களின் ஒரே நாடு , அங்கும் இந்த அரசியல் விளையாட்டு நல்ல வேலை அவர்கள் அனைவரும் ஒரே மொழியை பேசுகிறார்கள் இல்லையென்றால் அங்கும் நம் நிலைதான், வந்தே மாதரம்
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
05-ஜூலை-202007:43:53 IST Report Abuse
natarajan s நேபாளுக்கு 60 % பொருட்கள் இந்தியாவில் இருந்துதான் செல்கிறது. அவர்கள் நாட்டில் கஞ்சா நல்ல முறையில் பயிரிடப்பட்டு பீகார் எல்லை வழியாக தலை சுமையாக இந்தியா மூலம் பல நாடுகளுக்கு விநியோகிக்கப்படுவதை தடுத்தால் தன்னால் வழிக்கு வந்து விடுவார்கள்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
05-ஜூலை-202003:40:56 IST Report Abuse
வெகுளி சீனாவின் சொல் கேட்டு தேவையின்றி இந்தியாவை எதிர்த்து நேபாள பிரதமர் ஒலி சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டு விட்டார்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X