ஐக்கிய அரபு எமிரேட்சில் 716 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020
Share
Advertisement

அபுதாபி : ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 716 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அரபு எமிரேட்சில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முக்கிய கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) 716 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நாட்டின் மொத்த நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 50,857 ஆக உயர்ந்தது.


latest tamil news



அரபு எமிரேட்சில் புதிதாக 3 பேர் பலியாகினர். இதனையடுத்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 321 ஆக அதிகரித்தது. கொரோனா பாதிப்புகளில் இருந்து இன்று 704 பேர் முழுமையாக குணமடைந்தனர். இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,857 ஆக உயர்ந்தது. அரபு எமிரேட்சில் 71,000 க்கும் அதிகமாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X