பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதித்தவர்களில் 60.8 சதவீதத்தினர் குணமடைந்தனர்

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020
Share
Advertisement

புதுடில்லி; நாட்டில், நேற்று வரை, ஆறு லட்சத்து, 48 ஆயிரத்து, 315 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், குணமடைந்தோர் விகிதம்,60.8 சதவீதமாக உயர்ந்து உள்ளது.



latest tamil news



இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்தின் நேற்றைய அறிக்கை:நேற்று ஒரேநாளில், 22 ஆயிரத்து, 771 பேரிடம், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன், வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஆறு லட்சத்து, 48 ஆயிரத்து, 315 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், 1.93 லட்சம் பேருடன், மஹா.,முதலிடத்திலும், 1.02 லட்சம் பேருடன் தமிழகம் அடுத்த இடத்திலும், 94 ஆயிரத்து, 695 பேருடன், டில்லி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

நாட்டில் தொற்றுக்குஉள்ளானவர்களில், இரண்டு லட்சத்து, 35 ஆயிரத்து, 433 பேர் சிகிச்சையில் உள்ளனர்; 3.94 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோர் விகிதம், 60.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டில், நேற்று, 442 பேர் வைரஸ் பாதிப்பில் இறந்துள்ளனர். இது, தொற்றில் பலியானோர் எண்ணிக்கையை, 18 ஆயிரத்து, 655 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



இறந்தவர்களில், 8,376 பேருடன் மஹா., முதலிடத்தில் உள்ளது. டில்லியில், 2,923; குஜராத்தில், 1,904; தமிழகத்தில், 1,385; உ.பி.,யில், 749; மே., வங்கத்தில், 717; ம.பி.,யில், 593; ராஜஸ்தானில், 440; கர்நாடகாவில், 293; தெலுங்கானாவில், 283; ஹரியானாவில், 255; ஆந்திராவில், 206 பேரும் இறந்து உள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X