செயலி உருவாக்கத்தில் போட்டி: ஐ.டி., துறையினருக்கு மோடி அழைப்பு

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
செயலி உருவாக்கம் , ஐ.டி., துறை, பிரதமர் மோடி அழைப்பு

புதுடில்லி : 'மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான, 'மொபைல் ஆப்' எனப்படும் செயலிகளை உருவாக்க வேண்டும்.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை துவக்கியுள்ள, 'தற்சார்பு புதுமை சவால் இயக்கத்தில்' இணைந்து, இதை தகவல் தொழில்நுட்பத் துறையினர் சவாலாக ஏற்க வேண்டும். இதன் மூலம், உள்நாட்டு தேவையை நிறைவேற்றுவதோடு, உலக நாடுகளுடன் போட்டியிட வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவலால் கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்காக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையே பயன்படுத்த, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. தற்சார்பு என்ற கோஷம், நாடு முழுதும் வேகமாக பரவியது.


திட்டம் தீவிரம்இந்நிலையில், இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சீனாவுக்கு, அதிரடி சிகிச்சை அளித்தது.சீனா நிறுவனங்களின், 'டிக்டாக், ஷேர்இட்' உட்பட, 59 மொபைல், செயலிகளுக்கு, நம் நாட்டில் தடை விதிக்கப்பட்டது. இது, சீன நிறுவனங்களை நிலைகுலைய வைத்துள்ளது.தற்போது, உள்நாட்டு தேவைக்கு மட்டுமின்றி, உலகம் முழுதும் போட்டியிடும் வகையில், தொழில்நுட்ப புரட்சியை உருவாக்க, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை, பல்வேறு திட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த சூழ்நிலையில், 'தற்சார்புக்கான வழிகள்' என்ற பெயரில், 'லிங்க்ட்இன்' சமூகவலைதளத்தில், பிரதமர் மோடி ஒரு கட்டுரை எழுதிஉள்ளார்.

அதில் அவர் கூறிஉள்ளதாவது:நம் நாட்டில் மிகப் பெரிய திறமை உள்ளது; அதுபோல் மிகப் பெரிய சந்தையும் உள்ளது. இந்த சந்தையில், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றினால், உங்களுடைய உற்பத்தி அதிகரிக்கும்.தற்போது நம் நாட்டில் உள்ள, 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இடையே, புதுமையான வசதிகளை உருவாக்கும் முயற்சிகள் துவங்கியுள்ளன.உள்நாட்டிலேயே, செயலிகளை வடிவமைத்து, உருவாக்கி, அதை பிரபலப்படுத்தும் முயற்சிகள் வேகமடைந்துள்ளன.

தற்போது நாடு, 'ஆத்மநிர்பர் பாரத்' எனப்படும் தற்சார்புடைய இந்தியா என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறது. நாட்டின் தேவையை நிறைவேற்றும், செயலிகளை உருவாக்கும் உங்களின் முயற்சி, கடின உழைப்புக்கு இது மிகப் பெரிய வாய்ப்பு. உள்நாட்டின் தேவையை நிறைவேற்றுவதோடு, உலகெங்கும் போட்டியிட முடியும்.ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப சமூகம், இந்த இலக்கை நோக்கி செல்வதற்கு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், 'தற்சார்பு புதுமை சவால்' என்ற இயக்கத்தை துவக்கியுள்ளது.
இதன் மூலம், ஏற்கனவே உள்ள, செயலிகளை பிரபலப்படுத்தவும், புதிய, செயலிகளை உருவாக்கவும் சவால் விடுக்கப்படுகிறது.'ஆன்லைன்' மூலம் படிப்பது, வீட்டில் இருந்தே வேலை, ஆன்லைன் விளையாட்டுகள், பொழுதுபோக்கு, அலுவலகத் தேவை, சமூக தொடர்பு என, ஏற்கனவே உள்ள, செயலிகள் மற்றும் தளங்களை மேம்படுத்துவதற்கு, உங்களுக்குஆதரவு தர, அரசு தயாராக உள்ளது.இந்த இயக்கத்தின் கீழ், ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட, செயலிகளின் தரத்தை ஆராய்ந்து, அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கான உதவிகள் செய்யப்படும். ஒரு மாதத்துக்குள் இது செய்யப்படும்.இரண்டாம் கட்டமாக, புதிய, செயலிகள் உருவாக்குவது. இதற்கு தேவையான, ஆலோசனைகள், அதை சந்தைபடுத்துவது உட்பட அனைத்து உதவிகளும் செய்யத் தயாராக உள்ளோம்.
வாய்ப்புஅரசின் இந்த சவாலை எதிர்கொள்ளும்படி, தொழில்நுட்பத் துறையினருக்கு அழைப்பு விடுக்கிறேன். மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான, மொபைல், செயலிகளை உருவாக்குங்கள்.சுயசார்பு அடைவதுடன், மற்ற நாடுகளில் சந்தைப்படுத்தவும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இதில் மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அந்தக் கட்டுரையில், மோடி குறிப்பிட்டுள்ளார்.


மோடிக்கு பாராட்டுபிரதமர், மோடியின், லடாக் பயணத்துக்கு, ராணுவத் துறை நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ராணுவத் துறை நிபுணர்கள் கூறியதாவது:எல்லையில் சீனா மேற்கொண்ட சாகச முயற்சியை தடுக்க, எதையும் செய்யத் தயாராக உள்ளோம் என்பதை காட்டும் வகையில், மோடியின் பயணம் அமைந்துள்ளது. மேலும், நம் ராணுவம், நம் எல்லைகளை பாதுகாப்பதில் உறுதியுடன் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் இது அமைந்துள்ளது.தன் அராஜக நடவடிக்கைகளால், சீனா தற்போது, சர்வதேச அளவில் தனிமைபடுத்தப்பட்டுள்ளது. தென்சீன கடல் பகுதி மற்றும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் ஆட்டத்துக்கு முடிவு கட்டும் நிலை உருவாகியுள்ளது. இது, நம் நாட்டுக்கு சாதகமான சூழ்நிலையாகும்.எல்லை வரை சென்று, நம் வீரர்களை சந்தித்து, உயிரிழந்தோருக்கு அஞ்சலியும் செலுத்தியுள்ளார், பிரதமர் மோடி. இது ராணுவத்தினர் இடையே, நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில், மோதலில் எத்தனை வீரர்கள் இறந்தனர் என்பதை கூட சீனா தெரிவிக்கவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


திட்டம் அறிவிப்புபிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, உள்நாட்டில், மொபைல்போன் செயலிகளை உருவாக்குவதற்காக, இரண்டு திட்டங்களை, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், நேற்று வெளியிட்டுள்ளது. அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய தொழில்நுட்பத்தில், புதிய மொபைல்போன், செயலிகளை உருவாக்குவதற்காக, அடல் புதுமை இயக்கம், நிடி ஆயோக் இணைந்து, 'தற்சார்பு புதுமை சவால்' என்ற இயக்கம், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக அறிவிக்கப்படுகிறது.இத்திட்டங்களில் ஆர்வத்துடன் ஈடுபடும் நிறுவனங்களுக்கு, பரிசுகள் வழங்கப்படும். மேலும், அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும். இதற்கான விண்ணப்பங்களை, ஜூலை, 18ம் தேதிக்கள் சமர்ப்பிக்கலாம். நிபுணர்கள் அடங்கிய குழு, அவற்றை பரிசீலிக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
05-ஜூலை-202015:54:59 IST Report Abuse
mathimandhiri பல நாடுகள் சீனாவின் தொழில்நுட்ப மாயையிலும், சீப் இறக்குமதியிலும் அளவுக்கு மீறி மாட்டிக் கொண்டுள்ள நிலையில் மாற்று வழி கிடைக்காமல் அதிலிருந்து மீள்வதற்கு வழியின்றி முழி விதுங்கி நிற்கிறார்கள். சீனா உலகம் முழுவதும் தொடர் அடாவடியில் ஈடுபட்டுக்கொண்டும் அராஜகம் செய்து கொண்டும் திரிவதற்கான வாய்ப்பையும் உருவாகித் தந்துள்ளார்கள். அதாவது ஒரே சௌர்ஸ் ஐ இப்படி கண்மூடித்தனமாக நம்பிக்கிடப்பது நம் கட்டுப்பாட்டை அவர்கள் கையில் நாமே ஒப்படைத்து விட்டு மீண்டு வர முடியாமல் ஒரேயடியாக மூழ்கிப் போகும் விஷயம் என்பதை உணர வேண்டும். வருங்காலத்தில் நமது சுதந்திரம் அவன் கைக்குச் செல்வது தவிர்க்க முடியாதது. நம்மை ஆண்ட ஆங்கிலேயன் முதலில் இங்கு சோப்பு சீப்பு கண்ணாடி விற்கத்தான் வந்தான் என்பதை மறக்கக் கூடாது. பின்னர் ஆட்சியாளனாக மாறி நம்மை நேரடியாக ஆளத்தொடங்கி விட்டான். சீனாவும் டிக் டாக் போன்ற வக்கிரம் வளர்க்கும் ஆப்புக்கள் மற்றும் சீப் தயாரிப்புகள் மூலம் உள்ளூர் தயாரிப்பாளர்கள் ஒன்று காணாமல் பொய் விட்டார்கள் அல்லது அதிக உற்பத்திச் செலவு என்று கூறி திறமையும் ஆள் பலமும் இருந்தும் தயாரிக்க முன் வராமல் இருந்ததே இப்படி சீனாக்காரன் நம்மை மூழ்கடிக்கும் நிலைக்கு வளர்ந்த காரணம் எனலாம். மென்பொருள் துறையில் அந்த ஆப்புக்களை நம்மால் உருவாக்க முடியாதா? நிச்சயமாக முடியும். இனியும் காலம் தாழ்த்தினால் சீன நம்மை மூழ்கடித்தது விடும் என்பது உறுதி. மத்திய அரசு தடை செய்தவற்றை எக்காரணம் கொண்டும் விலக்கிக் கொள்ளக் கூடாது. நமது செயலை உருவாக்கும் திறமை நம்மிடம் உள்ளது. நமது ஐ ஐ டிக்களை நம் பிரதமரோ அல்லது மூத்த அதிகாரியோ உடனே முடுக்கி விட வேண்டும். நாம் செயலிகலின் ராஜாவாக மாறுவோம். மென்பொருள் துறையின் கிங் என்று மீண்டும் நிரூபிப்போம்.
Rate this:
Cancel
sripa - muscat,ஓமன்
05-ஜூலை-202015:42:46 IST Report Abuse
sripa மோடி போன்ற ஒரு தலைவர் நமக்கு கிடைத்தது நாம் அனைவரும் செய்த பாக்கியம். அவர் நீடுடி வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ராதிப்போம். ஜெய் மோடி சர்க்கார்.
Rate this:
Cancel
Rajan - Gaborone,போஸ்ட்வானா
05-ஜூலை-202015:09:29 IST Report Abuse
Rajan ஆயுதத்தால் மிரட்டுவதைவிட இதுபோன்ற மேலும் பல வழிகள சீனாவின் பொருளாதார அடிப்படை மற்றும் மனவலிமையை பலவீனம் ஆக்க செய்யும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X