பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நீடித்தாலும் நாளை முதல் அதிக தளர்வு...

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை : தமிழகம் முழுதும், ஊரடங்கு நீடித்தாலும், நாளை முதல் அதிக தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதே நேரத்தில், இன்று எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. மதுரையில் மட்டும், கொரோனா பரவலை தடுக்க, முழு ஊரடங்கு, மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழகம் முழுதும், வரும், 31ம்
ஊரடங்கு நீடித்தாலும் நாளை முதல் அதிக தளர்வு... Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus lockdown, corona curfew, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai

சென்னை : தமிழகம் முழுதும், ஊரடங்கு நீடித்தாலும், நாளை முதல் அதிக தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதே நேரத்தில், இன்று எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. மதுரையில் மட்டும், கொரோனா பரவலை தடுக்க, முழு ஊரடங்கு, மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழகம் முழுதும், வரும், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில், குறிப்பிட்ட பகுதிகளிலும், சென்னை மாவட்டம் முழுதும், ஜூலை, 1 முதல், 5 வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.கூடுதல் தளர்வுகள்அத்தியாவசிய கடைகள், காலை, 6:00 முதல், மதியம், 2:00 மணி வரை மட்டுமே செயல்பட்டன. வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், சென்னை, அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் மதுரை மாவட்டம் தவிர்த்து, பிற பகுதிகளில், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.


தற்போது, சென்னை மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும், கொரோனா நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, அதிகரித்தபடி உள்ளது. இதை தடுக்க, இம்மாதம் முழுதும், அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும், எவ்வித தளர்வுகளுமின்றி, மாநிலம் முழுதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, அரசு அறிவித்தது.அதன்படி, இன்று மாநிலம் முழுதும், எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இன்று முழுதும், காய்கறி, மளிகை கடைகள் உட்பட, எந்த கடைகளும் திறக்கப்படாது. வாகனங்கள் இயங்காது.


நாளை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும், தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. இம்மாவட்டங்களில், ஏற்கனவே இருந்தபடி, டீக்கடைகள், ஓட்டல்கள், வர்த்தக கடைகள் திறக்கப்படும்.
மேலும், இம்மாவட்டங்களில் நாளை முதல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் போன்றவற்றில், 50 சதவீத பணியாளர்கள் பணியாற்ற, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


கட்டுப்பாடுகள்அதே நேரத்தில், சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நாளை முதல், மறு உத்தரவு வரும் வரை, சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன் விபரம்:* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள், நகைக் கடை, ஜவுளிக் கடை போன்றவை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வழிமுறைகளுடன், காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை செயல்படலாம்.

* காய்கறி கடைகள், மளிகை கடைகள், காலை, 6:00 மணியிலிருந்து, மாலை, 6:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* உணவகங்களில், காலை, 6:00 முதல், இரவு, 9:00 மணி வரை, 'பார்சல்' சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தொலைபேசியில், 'ஆர்டர்' செய்து, வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு, இரவு, 9:00 மணி வரை, அனுமதி உண்டு. அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து, அடையாள அட்டை பெற்று, பணியாற்ற வேண்டும்
.

* டீக்கடைகளில், காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை, பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும்.
இவ்வாறு, அரசு அறிவித்துள்ளது. சென்னையில், இந்த தளர்வுகள், நாளை முதல் அமலுக்கு வந்தாலும், மதுரை மாவட்டத்தில் மட்டும், வரும், 12ம் தேதி வரை, முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.


'பெட்ரோல் பங்க்' இன்று விடுமுறைதமிழக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர், கே.பி.முரளி விடுத்துள்ள அறிக்கை:

தமிழகம் முழுதும், இம்மாதத்தின் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், சனிக்கிழமை நள்ளிரவு முதல், ஞாயிற்று கிழமை நள்ளிரவு வரை, பொது மக்களுக்கு, பெட்ரோல், டீசல் விற்கப்படாது.

ஆம்புலன்ஸ், பால், மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்களுக்காக, 'பெட்ரோல் பங்க்'குகள், குறைந்த ஊழியர்களுடன் செயல்படும்.

நாளை முதல் பெட்ரோல் பங்க்குகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், கட்டாயமாக முக கவசம் அணிந்து வர வேண்டும். முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே, பெட்ரோல், டீசல் வழங்கப்படும்.

எண்ணெய் நிறுவனங்கள், ஊரடங்கு முடியும் வரை, பெட்ரோல் பங்க்குகளில், வாடிக்கையாளர்களுடன் இணைந்து நடத்தும் விற்பனை மேம்பாட்டு நிகழ்வுகளை நடத்தக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


70 மது கடைகள் நாளை திறப்புசென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் மூடப்பட்ட, 70 மதுக் கடைகள், நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன.

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளில், ஜூன், 19 முதல், 30ம் தேதி வரை, தமிழக அரசு முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டது. இதனால், அந்த பகுதிகளில் செயல்பட்டு வந்த, 70 மதுக் கடைகளும், ஊரடங்கு துவங்கிய நாள் முதல் மூடப்பட்டன.

பின், இந்த பகுதிகளில், இம்மாதம், 5ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அந்த முழு ஊரடங்கு இன்றுடன் முடிகிறது. இதையடுத்து, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில், முழு ஊரடங்கு பகுதிகளில் மூடப்பட்ட, 70 மதுக் கடைகளும், நாளை முதல் திறக்கப்பட உள்ளன.

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், மார்ச் இறுதியில் இருந்து, 679 மதுக் கடைகளும் மூடப்பட்டு உள்ளன.


மதுரையில் முழு ஊரடங்கு ஏழு நாட்களுக்கு நீட்டிப்பு
முதல்வர் இ.பி.எஸ்., அறிக்கை:மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, கிராம ஊராட்சிகளிலும், ஜூன், 24 முதல், இன்று நள்ளிரவு, 12:00 மணி வரை, முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த முழு ஊரடங்கின் போது, கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்தாலும், நோய் தொற்றை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, முழு ஊரடங்கானது, மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

அதாவது, நாளை அதிகாலை முதல், 12ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி வரை, முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இக்காலத்தில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள, அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். கட்டுப்பாட்டு பகுதிகளில், எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும், அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை, உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும்.

இப்பகுதிகளில், ஒரு நாளைக்கு இரு முறை கிருமி நாசினி தெளிக்கப்படும். அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்நோய் பரவலை தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும், முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும், அடிக்கடி சோப்பை பயன்படுத்தி, கை கழுவ வேண்டும்.

சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அவசிய தேவை இல்லாமல், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்போது தான், நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

நோய் அறிகுறிகள் தென்பட்டதும், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். அரசின் முயற்சிகளுக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
05-ஜூலை-202014:22:24 IST Report Abuse
RajanRajan கடும் ஊரடங்கு அமல். ஊரடங்கு அமல் தளர்வுகளும் அமல் ஊரடங்கு அமல் இடைவெளி பராமரிப்பு அமல் ஊரடங்கு அமல் சாராயக்கடை திறப்பும் அமல். ஏன் சாமி ஒரே குழப்பமா இருக்கு. ஊரடங்கு அமல்லா தளர்வு அமலா. எங்கேயோ குரானா ஊழல் அரங்கேறுற மாதிரி இருக்கே. தனிமை படுத்தின அத்தனை குரானா நோயாளிகளுக்கும் அரசு தலைக்கு எத்தினி ரூபாய் செலவு பண்ணுது. அது அத்தனையும் பயனாளிக்கு தான் போயி சேர்கிறதான்னு ஒரு கேள்வி மக்களிடையே எழுகிறது. இங்கேயும் கருப்பு ஆடுகளான்னு கேக்குறாங்க. குரானா பூசணிக்காய் சலுகை எப்படி எலுமிச்சம் பழம் சைசுக்கு ஆவுது. எங்கேயோ குரானா ஊழல் சத்தம் கேக்குற மாதிரி இருக்கு அண்ணா. உஷாராகிக்கோங்க சுடலை.
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
05-ஜூலை-202011:31:36 IST Report Abuse
R. Vidya Sagar என்ன கிடுக்கியோ தெரிய வில்லை. வருமுன் காக்க வேண்டும்.
Rate this:
Cancel
05-ஜூலை-202008:04:22 IST Report Abuse
ஆப்பு இன்னைக்கு முழு ஊரடங்கு போட்டு அடிக்கிற அடியில கொரோனா தமிழகத்தை விட்டே ஓடிப்போயிடணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X