பொது செய்தி

தமிழ்நாடு

ஜவுளிக்கடைக்கு போனீங்களா? வாங்க பரிசோதனை செய்யனும்

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஜவுளிக்கடைக்கு போனீங்களா? வாங்க பரிசோதனை செய்யனும்

கோவை : கோவை பீளமேடு மசக்காளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த, ஒரு ஜவுளிக்கடைக்கு ஜூன் மாதத்தில் சென்று வந்தவர்கள், தாமாக முன்வந்து கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ள, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மே மாதம் முழுவதும் தொற்று, கோவையில் பதிவாகாத நிலையில், ஐந்தாம் கட்ட தளர்வுக்கு பின், பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த ஒரு நபர், சென்னையில் இருந்து அனுமதி பெறாமல் வந்து, கோவையில் பல்வேறு பகுதிகளுக்கு, சென்று வந்துள்ளார். பின், வைரஸ் தொற்று கண்டறிந்து சிகிச்சை பலனின்றி இறந்தார். இப்பகுதியில், தற்போது, 40க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே போன்று, பீளமேடு மசக்காளிபாளையம் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும், 'கணேசா டெக்ஸ்டைல்ஸ்' என்ற ஜவுளிக்கடையில் பணியாற்றிய சிலருக்கு பரிசோதனை செய்தபோது, ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு, கடை உடனடியாக மூடப்பட்டது. தொடர்ந்து, பணியில் இருந்தவர்கள், அக்கடைக்கு சென்றுவந்தவர்கள், என பலருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 45 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது, கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்பகுதி முழுமையாக மூடப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

இந்த கடைக்கு ஜூன் மாதம் வந்து சென்ற அனைவரும் தாமாகவே, 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பின், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் வைரஸ் தொற்று பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ளவேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
05-ஜூலை-202009:13:54 IST Report Abuse
Girija உக்கடம் உக்கடம் மீன் மார்க்கெட் கறிக்கடை கரும்புக்கடை இடையார்ப்பள்ளயம் வெரைட்டிஹால் ஏறு ஏறு பிரீ பிரீ போலாம் ரைட்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
05-ஜூலை-202007:05:43 IST Report Abuse
blocked user ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் தெரிய சில நாட்கள் ஆகலாம். அதற்குள் அவர்களால் 850 பேருக்கு நோயை பரப்ப முடியும். எல்லோரும் முகக்கவசம் அணிந்தால் 850 என்ற கணக்கு வெகுவாக குறையலாம். சிங்கப்பூரில் ஒரு சர்ச் மற்றும் கடைத்தொகுதியில் இருந்து ஆரம்பித்து 40 000 பேரை பாதித்தது.
Rate this:
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
05-ஜூலை-202003:23:20 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை இப்படித்தான் டெல்லிக்கு போனவங்களையும் கூப்புட்டு டெஸ்ட் பண்ணுனாங்க அப்ப அவங்கள டெல்லி சோர்ஸ்ன்னு சொன்ன மாதிரி இவங்கள கோயம்புத்தூர் ஜவுளி சோர்ஸ்ன்னு சொல்லுவாங்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X