அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
அத்வானி, ஜோஷி,  அரசு பங்களா

புதுடில்லி: 'பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள, அத்வானி மற்றும் ஜோஷிக்கு, பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதால், அவர்களுக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது' என, பா.ஜ., தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு, யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளதோ, அவர்களுக்கு மட்டும் அரசு பங்களா ஒதுக்கப்படும். அடுத்து, பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

சமீபத்தில் சோனியா, ராகுல், பிரியங்காவிற்கு, இந்த பாதுகாப்பு விலக்கப்பட்டு, துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 'பிரியங்கா, எம்.பி., பதவியில் இல்லை; மேலும், அவருக்கு, எஸ்.பி.ஜி., பாதுகாப்பும் விலக்கப்பட்டதால், அரசு பங்களா கிடையாது' என, மத்திய அரசு கூறியது.

இந்நிலையில், 'முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, 2022, ஜூன் வரை, அரசு பங்களாவில் வசிக்கலாம்; அதே நேரம், முன்னாள் துணை பிரதமர் அத்வானி, ஆயுட்காலம் முழுவதும் அரசு பங்களாவில் வசிக்கலாம்' என, மத்திய அரசு ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, 'ஒரு பக்கம் பிரியங்காவை, அரசு பங்களாவை காலி செய்யச் சொன்ன மோடி அரசு, எஸ்.பி.ஜி., பாதுகாப்பில் இல்லாத, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகருக்கு மட்டும் அரசு பங்களாக்களை ஒதுக்கியது ஏன்' என, காங்., தலைவர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், 'அத்வானி, ஜோஷி இருவருமே, சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்; அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது; அதனால்தான் அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது' என, பா.ஜ., தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
11-ஜூலை-202007:11:03 IST Report Abuse
natarajan s அப்படியென்றால் இந்தியாவையே இடித்த( சோனியா) குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசு பங்களா கொடுப்பதுதான் தர்மம்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
08-ஜூலை-202009:04:29 IST Report Abuse
Sampath Kumar ப்ரியங்கா விடம் இருந்து புடுங்கி கொடுப்பதால் கிடைக்கும்
Rate this:
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
05-ஜூலை-202022:18:33 IST Report Abuse
தங்கை ராஜா குற்றவாளிகளுக்கு அரசு பங்களா, பாதுகாப்பு. இது தான் தேசபக்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X