அரசியல் செய்தி

தமிழ்நாடு

பேராபத்து ஆகிவிடும் :ஸ்டாலின் எச்சரிக்கை

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
பேராபத்து ,ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை : 'கொரோனா அலை துவங்கியுள்ளதால், கிராமங்களை தயார்படுத்த வேண்டும்; இல்லாவிட்டால், பேராபத்து ஆகிவிடும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எச்சரித்துள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று பரவலின் மாவட்ட வாரியான தகவல்களை கோரி, கலெக்டர்களிடம், தி.மு.க., மாவட்ட செயலர்கள் மனு அளித்துள்ளனர். கிராமங்களில், கொரோனா அலை துவங்கியும், சமூகப்பரவல் இல்லை என, அ.தி.மு.க., 'விஞ்ஞானிகள்' காலத்தை வீணடிக்கின்றனர். கிராமங்களை தயார்படுத்தாவிடில், பேராபத்து ஆகி விடும் என, எச்சரிக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


அன்புக்கு ஆதாரம் அன்பழகன்: ஸ்டாலின் உருக்கம்





''தனக்கு உடல் நலமில்லை என்றதும், நேராக கருணாநிதி துயில் கொள்ளும் கடற்கரைக்கு சென்று, அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, மருத்துவமனைக்கு, ஜெ.அன்பழகன் சென்றது, அவரது அன்புக்கு ஆதாரம்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

கொரோனா தொற்றால் மறைந்த, ஜெ.அன்பழகனின் படத்திறப்பு நிகழ்ச்சி, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, ஸ்டாலின் இல்லத்தில் நேற்று நடந்தது. காணொலி காட்சி வாயிலாக, கட்சி நிர்வாகிகளிடம், ஸ்டாலின் பேசியதாவது:

கருணாநிதியை மேடையில் இருக்கும் போதே, ஜெ.அன்பழகன், 'நான் போனஸ் வாழ்க்கை வாழ்கிறேன். என் உடல்நிலை பற்றி, அனைவருக்கும் தெரியும். என் வாழ்க்கை எப்போதும் முடியலாம். அப்போது, என் உடல் மீது, உங்களது கண்ணீர் விழ வேண்டும்' என்றார்.

அந்த உணர்ச்சிகரமான பேச்சை கேட்டு, அனைவரும் கைதட்டினர். ஆனால், கருணாநிதி, 'நீங்கள் அனைவரும் கைதட்டினீர்கள். ஜெ.அன்பழகன் சொல்வதைக் கேட்கும் போது, என் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை, நீங்கள் உணர வேண்டும்' என்றார். ஜெ.அன்பழகன் பேச்சை கேட்டு கலங்கி விட்டார், கருணாநிதி.

தனக்கு உடல் நலமில்லை என்றதும், நேராக, கருணாநிதி துயில்கொள்ளும் கடற்கரைக்குச் சென்று, அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, மருத்துவமனைக்கு சென்றார் என்பதை விட, கட்சியின் மீதும், கருணாநிதியின் மீதும், அவர் வைத்திருந்த அன்புக்கு வேறு ஆதாரம் சொல்ல வேண்டியதில்லை.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
07-ஜூலை-202006:16:40 IST Report Abuse
Indhuindian பேராபத்து இன்னிக்கி நேத்திக்கு ஆரம்பிக்கல 1967 லே ஆரம்பிச்சுது. அன்னிக்கே திரு பக்தவச்சலம் சொன்னாரு தமிஷ் நாட்டில் விஷ கிருமி பரவி இருக்குனு. அதை இன்னிக்கி வரிக்கும் ஒழிக்க முடியலையே. அதுக்கு ஒரு தடுப்பூசியோ மருந்தோ இன்னும் கண்டு பிடிக்கலையே. அதை கண்டு பிடிச்சிச்சா தான் தமிழக மக்கள் நல்லா இருக்க முடியும்
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
06-ஜூலை-202016:34:04 IST Report Abuse
mathimandhiri அடாடா டடடடா ...... இந்த உள்ளூர் பப்புவின் லொள்ளு தானாக முடியலடா சாமி. அன்பழகன் செஞ்சத இனி யாரும் செய்யக் கூடாது.
Rate this:
Cancel
Sanjay - Chennai,இந்தியா
05-ஜூலை-202023:00:21 IST Report Abuse
Sanjay Hi
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X