கமலின், 'நாமே தீர்வு' இணையதளம் துவக்கம்

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (19)
Advertisement
சென்னை : நடிகர் கமல் ஆரம்பித்துள்ள, 'நாமே தீர்வு' இயக்கத்திற்கு, தனி இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த, கமலின் மக்கள் நீதி மையம் கட்சி அறிக்கை:மக்கள் நீதி மையம் சார்பில், மக்களே, மக்களின் பிரச்னைக்கு உதவிடும் வகையில், 'நாமே தீர்வு' என்ற, புதிய இயக்கம் துவக்கப்பட்டது. அதில் இதுவரை, 5,700க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும், 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவிக்கான
 கமலின், 'நாமே தீர்வு'  இணையதளம் துவக்கம்

சென்னை : நடிகர் கமல் ஆரம்பித்துள்ள, 'நாமே தீர்வு' இயக்கத்திற்கு, தனி இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த, கமலின் மக்கள் நீதி மையம் கட்சி அறிக்கை:மக்கள் நீதி மையம் சார்பில், மக்களே, மக்களின் பிரச்னைக்கு உதவிடும் வகையில், 'நாமே தீர்வு' என்ற, புதிய இயக்கம் துவக்கப்பட்டது. அதில் இதுவரை, 5,700க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும், 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவிக்கான அழைப்புகளும் வந்துள்ளன.

இதன் அடுத்தகட்டமாக, நாமே தீர்வு இயக்கத்திற்கான இணையதள பக்கம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதை, நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் அறிமுகப்படுத்தியுள்ளார்.கொரோனாவால் பாதித்தவர்களை காட்டிலும், ஊரடங்கால் பாதித்தவர்கள் அதிகம். அவர்களுக்கு உதவும் வகையில், இத்தளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தன்னார்வலர்கள், உதவிகள் தேவைப்படுவோரை அறிந்து, நேரிலோ, மற்றவர்கள் வாயிலாகவோ உதவலாம்.


களத்தில் இறங்கி பணிபுரியும் எண்ணம் உள்ளவர்கள், இத்தளத்தின் வாயிலாக இயக்கத்தில் இணையலாம். இதில் அனைத்துமே வெளிப்படையாக இருக்கும். அலாதி அன்பிருந்தால், அனாதை யாருமில்லை என்ற, நம்பிக்கையில் துவக்கப்பட்டுள்ள, நாமே தீர்வு இயக்கத்தின் வழியாக, இன்னும் அதிக மக்களுக்கு உதவிட, இந்த, www.naametheervu.org என்ற, தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,இந்தியா
06-ஜூலை-202000:13:31 IST Report Abuse
அன்பு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Balasubramanyan S - chennai,இந்தியா
05-ஜூலை-202020:19:49 IST Report Abuse
Balasubramanyan S Without sping one rupee from his pocket he ss tweeter as true person concerned poor person. He sps money for his girl fris . I do not know how these educated persons are behind him in his party. Has he paid money to the victims in indian2 shooting? He will not say .
Rate this:
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
05-ஜூலை-202021:30:31 IST Report Abuse
வக்கீல் வண்டுமுருகன்கட்சி தலைவர்தான் பணம் கொடுக்கணும்னா, ஸ்டாலின், சசிகலா, எடப்பாடி மாதிரி ஆட்கள் தான் தலைவரா இருக்க முடியும். கஷ்ட்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அத்தனை சீக்கிரம் எடுத்த கொடுக்கமுடியாது...
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
05-ஜூலை-202018:46:20 IST Report Abuse
கொக்கி குமாரு கணிதத்தில் அல்ஜீப்ரா அப்படின்னு ஒரு கணக்கு இருக்கும். அது எளிதில் யாருக்கும் புரியாது. அதைக்கூட புரிந்துகொள்ளலாம் போல கமல் என்ன சொல்ல வர்றாருன்னு புரிஞ்சிக்கிறது கஷ்டம். முதல்ல இந்தாள புரியிறமாதிரி பேச சொல்லுங்கப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X