சென்னை : நடிகர் கமல் ஆரம்பித்துள்ள, 'நாமே தீர்வு' இயக்கத்திற்கு, தனி இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த, கமலின் மக்கள் நீதி மையம் கட்சி அறிக்கை:மக்கள் நீதி மையம் சார்பில், மக்களே, மக்களின் பிரச்னைக்கு உதவிடும் வகையில், 'நாமே தீர்வு' என்ற, புதிய இயக்கம் துவக்கப்பட்டது. அதில் இதுவரை, 5,700க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும், 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவிக்கான அழைப்புகளும் வந்துள்ளன.
இதன் அடுத்தகட்டமாக, நாமே தீர்வு இயக்கத்திற்கான இணையதள பக்கம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதை, நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் அறிமுகப்படுத்தியுள்ளார்.கொரோனாவால் பாதித்தவர்களை காட்டிலும், ஊரடங்கால் பாதித்தவர்கள் அதிகம். அவர்களுக்கு உதவும் வகையில், இத்தளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தன்னார்வலர்கள், உதவிகள் தேவைப்படுவோரை அறிந்து, நேரிலோ, மற்றவர்கள் வாயிலாகவோ உதவலாம்.
களத்தில் இறங்கி பணிபுரியும் எண்ணம் உள்ளவர்கள், இத்தளத்தின் வாயிலாக இயக்கத்தில் இணையலாம். இதில் அனைத்துமே வெளிப்படையாக இருக்கும். அலாதி அன்பிருந்தால், அனாதை யாருமில்லை என்ற, நம்பிக்கையில் துவக்கப்பட்டுள்ள, நாமே தீர்வு இயக்கத்தின் வழியாக, இன்னும் அதிக மக்களுக்கு உதவிட, இந்த, www.naametheervu.org என்ற, தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE