இந்தியா பெரிய விலை கொடுக்க நேரிடும் : ராகுல் மீண்டும் எச்சரிக்கை

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (96)
Share
Advertisement
Ladakh, Chinese intrusion, warning, India, Rahul Gandhi, china, india, border crisis


புதுடில்லி: 'சீனா ஆக்கிரமித்துள்ளதாக நாட்டுப்பற்றுள்ள லடாக் மக்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய குரலை புறக்கணித்தால், இந்தியா மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்' என, காங்., முன்னாள் தலைவர், ராகுல், மீண்டும் கூறியுள்ளார்.

இந்தியா - சீனா எல்லைப்பிரச்னையில், மத்திய அரசையும், பிரதமர்,நரேந்திர மோடியையும்,காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. குறிப்பாக அக்கட்சியின் முன்னாள் தலைவரான, ராகுல், நாள்தோறும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார்.
'லடாக்கை சீனாவுக்கு, மோடி தாரை வார்த்து விட்டார்' என்றும் ராகுல் கூறியிருந்தார்.


latest tamil news


இந்நிலையில், ஊடக செய்தியை மேற்கோள்காட்டி, ராகுல், சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:சீனா ஆக்கிரமித்துள்ளதாக, நாட்டுப்பற்றுள்ள லடாக் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களுடைய குரலை புறக்கணித்தால், இந்தியா மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்; இந்தியாவின் நலனுக்காக, அவர்களுடைய குரலை கேளுங்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.இதேபோன்று, ராகுலின்சகோதரியும், கட்சியின் பொதுச் செயலருமான, பிரியங்காவும், சமூக வலைதளத்தில், ஹிந்தியில் செய்தி பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
10-ஜூலை-202016:26:41 IST Report Abuse
dina லடாக் குரலை ஒடுக்கியது காங்கிரெஸ்ஸா அல்லது சீனா வா என்று சரித்திரத்தை படி மடமைக்கு கிரீடம் வைத்தது போல் உள்ளது உன் SEIYAL
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
09-ஜூலை-202009:34:44 IST Report Abuse
Tamilnesan நேரு குடும்பம் இந்தியாவின் பெரிய சுமை மற்றும் அவமான சின்னங்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
08-ஜூலை-202017:53:53 IST Report Abuse
Rafi உண்மையை சொன்னாலும் அதற்க்கு முறையாக பதில் கொடுக்க மாட்டார்கள், பதில் சம்மந்தமில்லாமல் கொண்டு செல்வது நம் நாடு சந்திக்கும் அவமானங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X