குன்னுாரில் வரலாற்று கலைக்கூடம் பழமை தகவல் அறிய வாய்ப்பு

Added : ஜூலை 05, 2020
Advertisement
குன்னுார்:குன்னுாரில் வரலாற்று கலைக்கூடம் அமைக்கப்பட்டு வருவது, உள்ளூர் மாணவ, மாணவியருக்கு பெரும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் பெட்போர்டு பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான மிகவும் பழமையான கட்டடம், பயன்பாடின்றி பொலிவிழந்து காணப்பட்டது. இந்நிலையில், குன்னுார் நகராட்சியுடன்,'கிளீன் குன்னுார்' அமைப்பு, 'வின்டர் பிளைட்' சங்கம் இணைந்து,
 குன்னுாரில் வரலாற்று கலைக்கூடம்  பழமை தகவல் அறிய வாய்ப்பு

குன்னுார்:குன்னுாரில் வரலாற்று கலைக்கூடம் அமைக்கப்பட்டு வருவது, உள்ளூர் மாணவ, மாணவியருக்கு பெரும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் பெட்போர்டு பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான மிகவும் பழமையான கட்டடம், பயன்பாடின்றி பொலிவிழந்து காணப்பட்டது. இந்நிலையில், குன்னுார் நகராட்சியுடன்,'கிளீன் குன்னுார்' அமைப்பு, 'வின்டர் பிளைட்' சங்கம் இணைந்து, கட்டடத்தை துாய்மைப்படுத்தி, வரலாற்று கலைக்கூடமாக மாற்றினர்.இந்த முயற்சியால், பல பழமையான தகவல்களை மக்கள் அறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 1831ம் ஆண்டில் இருந்து, ஆங்கிலேயரின் வரலாற்று பதிவுகள்; குன்னுாரின் அரிய புகைப்படங்கள், ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. பண்டைய கால மக்கள் பயன்படுத்திய அரிய பொருட்கள் சேகரிக்கப்பட்டு, கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.இந்த கலைக்கூடம் உள்ளூர் மக்கள், மாணவர்களுக்கு பயனளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X