பொது செய்தி

தமிழ்நாடு

யானைகள் இறப்பு ஏன்? வனத்துறை விளக்கம்

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

சென்னை : ‛கோவை வனக் கோட்டத்தில், ஆறு மாதங்களில், 14 யானைகள் இறந்துள்ளன. நோய் மற்றும் யானைகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக, 13 யானைகள் இறந்துள்ளன' என, வனத்துறை தெரிவித்துள்ளது.latest tamil newsவனத்துறை வெளியிட்ட அறிக்கை:கோவை வனக் கோட்டத்தில், ஏழு வனச்சரகங்கள் உள்ளன. பத்து நாட்களில், 12 யானைகள், மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் இறந்ததாக, சிலர் செய்தி வெளியிட்டு வருகின்றனர்....இவ்வனக் கோட்டத்தில், ஆறு மாதங்களில், 14 யானைகள் இறந்துள்ளன. அதில், 13 யானைகள், நோய் மற்றும் அவற்றுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இறந்துள்ளன.இறந்த யானைகளை, மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, உடல் கூறாய்வு செய்யப்பட்டு, அவை இறந்ததற்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.


latest tamil newsபிப்ரவரியில், சிறுமுகை வனச்சரகம், மோத்துார் பெத்திக்குட்டை காப்புக்காட்டில், பெண் யானை, ஜீரணப்பாதைக் கோளாறு காரணமாக இறந்துள்ளது.

ஏப்ரல் மாதம், மூன்று ஆண் யானைகள் மற்றும் ஒரு பெண் யானை, இயற்கை உபாதை, யானைகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல், வெப்ப அழற்சி, மூளை ரத்தக்கசிவு, வயிற்றுப்போக்கு காரணமாக இறந்தது அறியப்பட்டது.மே மாதம், இரண்டு பெண் யானைகள், கரு வளர்ச்சி கோளாறு மற்றும் மோதல் காரணமாக இறந்துள்ளன.ஜூன் மாதம், இரண்டு ஆண் மற்றும் மூன்று பெண் யானைகள், பள்ளத்தில் தவறி விழுந்து இறந்துள்ளன....இம்மாதம், 2ம் தேதி பெண் யானை ஒன்று, ஜீரணப்பாதை கோளாறு காரணமாக இறந்துள்ளது. அன்றைய தினம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில், யானைக் கூட்டம், விளைநிலத்திற்குள் புகுந்து, பயிர்களுக்கு சோதாரத்தை ஏற்படுத்தி உள்ளனஅப்போது, தோட்ட உரிமையாளர்கள், யானைகளை விரட்ட, துப்பாக்கியால் சுட்டதில், ஒரு பெண் யானை இறந்துள்ளது.இது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
வன விலங்குகளில் பிறப்பு, இறப்பு, இயற்கையாக நடக்கும் நிகழ்வாகும்.எனினும், யானைகள் பாதுகாப்பு, யானைகள் வாழ்விடத்தை மேம்படுத்துதல், உயிரிழப்பை குறைத்தல் போன்றவற்றுக்கான காரணங்களை கண்டறிய, யானை ஆராய்ச்சியாளர்கள், கால்நடை மருத்துவர்கள் அடங்கிய, சிறப்பு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழு பரிந்துரையின்படி, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
05-ஜூலை-202010:19:14 IST Report Abuse
RADE அதிக ஜீரண கோளாறு ஒரு காரணம் எனில் சாப்பிட கூடாத எதையோ சாப்பிட்டு யானை இறந்து இருக்கும் என்று தோன்றுகிறது. வன காவலர்கள் அது இயற்கை வியாதியா இல்லை செயற்கையாக மனிதர்கள் ஏற்படுத்தியதை என்று ஆராயனும்
Rate this:
Cancel
Puratchi Thondan (a) Senathipathy - Chennai,இந்தியா
05-ஜூலை-202008:50:45 IST Report Abuse
Puratchi Thondan (a) Senathipathy யானைகள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கக்கூடுமோ என்ற கோணத்திலும் புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
05-ஜூலை-202008:45:25 IST Report Abuse
Girija பேச்சும் பதிலும் மட்டும் வக்கணையாக எட்டு ஊருக்கு வாய் கிழியும். வனத்துறை என்னதான் செய்கிறது ? நீங்களே யாருக்கும் தெரியாமல் ஒன்பது யானையை கொன்று புதைத்துள்ளீர்கள். வாயில் புண் வந்த யானையை, கும்கிகள் உதவியுடன் முகாமிற்கு அழைத்து சென்று காப்பாற்றி இருக்கலாம். தரையில் சோர்ந்து ஒரே இடமாக படுத்திருந்த யானையை எழுப்பி நிற்கவைத்து காப்பாற்றி இருக்கலாம் .மயில்களுக்கு முறையாக உணவு தண்ணீர் வனப்பகுதியிலேயே வழங்கி பாதுகாப்பாக வேலி அமைக்கமுடியவில்லை , அரசு அலுவலகங்களில் இருக்கும் சந்தன மரத்தை பாதுகாக்க முடியவில்லை , மான் வேட்டை முயல் வேட்டை யை தடுக்க முடியவில்லை . அவனவன் வேட்டையாடி டிக் டாக் வேறு பதிவிடுகிறான் .இப்பொழுது காட்டில் நிறைய வீரப்பன்கள் தோன்றிவிட்டனரா ? வனக்காவலர்கள் சரியாக ஒழுங்காக நேர்மையாக வேலை செய்கிறார்ரகலா என்று கண்காணிப்பதற்குத்தான் முதலில் காமிரா பொருத்தவேண்டும் . விலங்குகள் கூட நேர்மையாக தான் நடந்துகொள்ள்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X