பொது செய்தி

தமிழ்நாடு

13 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும், 13 மாவட்டங்களில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், மருத்துவ முகாம்களை அதிகப்படுத்தவும், சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில், கொரோனாவால் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது, 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.



latest tamil news



கொரோனா பாதிப்பு, ஜூன் துவக்கத்தில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தான், அதிகமாக இருந்தது. சென்னையில் கட்டுப்பாடுகள் அதிகரித்ததால், பலர் விதிகளை மீறி சொந்த ஊர்களுக்கு சென்றனர்.இப்படி சென்றவர்கள் வாயிலாக, பல மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு தீவிரமடைய துவங்கியுள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, கடலுார், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மதுரை, ராமநாதபுரம், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் என, 13 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.எனவே, கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.


latest tamil news



இது குறித்து, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:சென்னையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வருகிறது; தொற்று எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருவதை தடுக்க, மருத்துவ முகாம்களை அதிகளவில் நடத்த அறிவுறுத்தி உள்ளோம்.மேலும், பொதுமக்களும் முக கவசம் அணிதல், கை கழுவும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதில், அலட்சியம் காட்டாமல், மன வலிமையுடன் இருத்தலும் அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
05-ஜூலை-202005:54:30 IST Report Abuse
Nagercoil Suresh ஒரு நபருக்கு ஒரு க்ளோஸ் பயன் படுத்துவது ஆரோக்கியமானது...இதுபோல் கையுறைகளை பயன்படுத்தினால் நோயை பரப்புவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது...கையுறையில் தெளிக்கும் கிருமிநாசினியினால் கிருமி செத்துவிடும் என யார் உத்தரவாதம் தந்தது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X