திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

திருப்பதி : ''திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், 17 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது,'' என, அறங்காவலர் குழு தலைவர், சுப்பாரெட்டி கூறினார்.



latest tamil news




இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலத்திலும் நோய் பாதிப்பு குறித்தும், கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டு வரவேண்டும் என முன்பு தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, திமந்தோறும் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில் திருமலையின் அன்னமய்ய பவனில், நேற்று காலை அவசர அறங்காவலர் குழு கூட்டம், காணொலி காட்சி வாயிலாக நடந்தது. அதில், அறங்காவலர் குழு தலைவர், சுப்பாரெட்டி கூறியதாவது: திருமலையில், ஏழுமலையான் தரிசனம் ஜூன், 8ம் தேதி துவங்கப்பட்டது. திருமலைக்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், திருமலையில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியர்கள், அர்ச்சகர்கள் என, 17 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


latest tamil news




அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில், தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தினசரி, 12 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையான தரிசித்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில், பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் எண்ணம் இல்லை. வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள், அம்மாநில அனுமதியை, முறையாக பெற்று பச்சை மண்டல பகுதிகளிலிருந்து மட்டுமே, ஏழுமலையான் தரிசனத்திற்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
05-ஜூலை-202013:36:15 IST Report Abuse
M.COM.N.K.K. கடவுள் என்பவர் உங்களையெல்லாம் ஒருவர்மேல் ஒருவர் மோதிச்செல்வதும் முண்டியடித்து செல்லச்சொன்னாரா இல்லையே தவறு கடவுள் மேல் இல்லை பக்தர்கள்மேல்தான் தவறு. ஊரடங்கு தளர்வு என்று சொன்னால் மக்களின் மனநிலை என்ன தெரியுமா வைரஸ் போய்விட்டது இனி ஒருவருமேல் ஒருவர் ஏறிச்செல்லலாம் சமூகஇடைவெளியை இனி பின்பற்றத்தேவை இல்லை என்றமுடிவை மக்கள் எடுக்கிறார்கள்.குற்றமிழைப்பவர்கள் மனிதர்களே இதை நாம் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
Rate this:
Cancel
Madhav - Chennai,இந்தியா
05-ஜூலை-202011:26:14 IST Report Abuse
Madhav எதற்க்காக அவசர அவசரமாக கோயிலை திறந்து அர்ச்சகர் முதல் பலரையும் நோயுக்கு ஆளாக்க வேண்டும். இவர்களிடமிருந்து எத்தனை பேருக்கு/ ஊருக்கு நோய் போனதோ விபரீத முயற்சிகள்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
05-ஜூலை-202006:25:41 IST Report Abuse
Mani . V அப்ப, கௌரவ டாக்டர் சொன்னது மாதிரி கடவுள் மக்களை கொரோனாவிடம் இருந்து காப்பாற்றாதா? ஓ மை காட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X