அமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா?: போராட்டக்காரர்கள் மீது டிரம்ப் பாய்ச்சல்!

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

வாஷிங்டன்: ''இனவெறிக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, சிலர் அமெரிக்காவின் வரலாற்றை அழிக்க துடிக்கின்றனர்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார்.\



latest tamil news



அமெரிக்காவில், சமீபத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்தவர், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டார். இதற்கு நாடு முழுதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. இதில் வன்முறையும் அரங்கேறியது.பெரும் அச்சுறுத்தல்.

இந்நிலையில், அமெரிக்காவின் சுதந்திர தினத்தையொட்டி, தேசிய நினைவிடம் அமைந்துள்ள மவுன்ட் ரஷ்மோரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது:சமீபகாலமாக அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் கவலை அளிக்கின்றன. இந்த போராட்டங்களில், வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. அமெரிக்காவை நிறுவிய தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.இந்தப் போராட்டங்கள், அமெரிக்காவின் அரசியல் நடைமுறையின் அடித்தளத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன.

இடதுசாரி கலாசார புரட்சி என்ற பெயரில், அமெரிக்காவின் கலாசாரத்தை அழிக்க முயற்சிக்கின்றனர்.பள்ளிகளில், நம் குழந்தைகளுக்கு நம் கலாசாரத்துக்கு எதிரான விஷயங்களை கற்றுக் கொடுக்கின்றனர்.நாட்டின் பல நகரங்களில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக வன்முறைகளை நிகழ்த்துகின்றனர்.நம் நாட்டை நிறுவிய, வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றிய தலைவர்களை கவுரவிக்கும் விதமாக, அவர்களது சிலைகளுடன் கூடிய திறந்தவெளி பூங்கா விரைவில் அமைக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

இதற்கிடையே, டொனால்டு டிரம்பின் மூத்த மகன் டிரம்ப் ஜூனியரின் தோழியும், டிரம்ப் தேர்தல் பிரசாரத்துக்கு முக்கிய பொறுப்பேற்றிருந்த வருமான கிம்பெர்லி க்யில் போயலுக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர், தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். டிரம்பின் மகனுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.


latest tamil news



'அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வருவதை அடுத்து, பொது இடங்களில் அதிக அளவில் கூட வேண்டாம்' என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். ஆனால், அதிபர் டிரம்ப், அதை பொருட்படுத்தவில்லை.'சல்யூட் அமெரிக்கா' என்ற பெயரில், அவர் பிரமாண்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார். வாஷிங்டன் உள்ளிட்ட பல நகரங்களில் நடந்த இந்த கொண்டாட்டங்களில், முக கவசம் அணியாமல், ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
05-ஜூலை-202019:24:44 IST Report Abuse
Raj முதலில் மனிதனை மதியுங்கள்.
Rate this:
Cancel
Sami Sam - chidambaram ,இந்தியா
05-ஜூலை-202015:59:20 IST Report Abuse
Sami Sam முகக்கவசம் தொற்றை தடுக்காது என்று நம்புகிறீர்களா அது உண்மையான
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-202022:10:26 IST Report Abuse
தல புராணம்இவன் தான் LYSOL இன்ஜெக்ஷன் போட்டுக்கலாம் என்று சொன்ன அறிவிலி. அப்புறம் Hydroxychloroquine மருந்து கம்பெனியின் பங்கு விலையை உயர்த்தி லாபம் பார்த்த கூட்டம். 1,28,000 + உயிர்கள் பலியாக காரணமான ஒரு வெள்ளைவெறியன்....
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
05-ஜூலை-202013:18:25 IST Report Abuse
Allah Daniel கான்ஃபெடெரேட் படைகள் எதிர்த்து போராடியதே குடியரசு (டிரம்ப்பின்) கட்சிதான்..இது இங்க கம்புசுத்தும் சிலர்க்கு தெரியலே...ஆமா காந்தி சிலை கூட அசிங்கப்படுத்த பட்டுள்ளதே, அதுக்கு கம்புசுதலயா?? ... இது தெரியாமல் ஜால்றா போடும் உன்னைப்போல் .. நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது..
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-202022:07:21 IST Report Abuse
தல புராணம்You are right about the US Civil war. Lincoln was Republican, but Trump is neither a Republican nor a Democrat, he is a good-for-nothing, senseless, self-centered, brainless, megalomaniac. Every sensible leader and person loathe him....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X