பொது செய்தி

இந்தியா

98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

பணாஜி: கோவா மருத்துவமனையில், 98 நாட்கள் தங்கியிருந்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.



latest tamil news



கோவாவில், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தலைநகர் பணாஜியில், இ.எஸ்.ஐ., எனப்படும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில், கொரோனா சிறப்பு பிரிவு உள்ளது. இதில், டாக்டர் எட்வின் கோம்ஸ் தலைமையில், சிறப்பு மருத்துவ சிகிச்சை குழு அமைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இவர், கடந்த, 98 நாட்களாக மருத்துவமனையிலேயே தங்கியிருந்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையளித்து விட்டு, நேற்று முன்தினம், தன் வீட்டிற்கு திரும்பினார்.அங்கு, எட்வினின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள், அவரது சேவையை பாராட்டி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
05-ஜூலை-202011:59:07 IST Report Abuse
konanki தமிழக ஊடகங்கள் சேனல்கள் நெறியாளர்கள் சமூக ஆர்வலர்கள் இடது சாரி சிந்தனையாளர்கள் அறிவு ஜிவிகள் யாரும் இவரைப் பற்றி பேச மாட்டார்கள். சூர்யா ஜோதிகா கமல் ஹாசன் ஜோசப் விஜய் விஜய் சேதுபதி தான் தமிழர்களுக்கு அல்டிமேட்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
05-ஜூலை-202011:43:50 IST Report Abuse
konanki உண்மையான ஹிரோ . வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
05-ஜூலை-202011:18:33 IST Report Abuse
Balasubramanian Ramanathan கமல்ஹாசன் சார்பாக தங்களை பாராட்டுகிறேன். அவரு கொஞ்சம் பிசி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X