பொது செய்தி

இந்தியா

நிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Coronavirus, Corona, Covid-19, services, corona india, modi, pm modi, appreciates, bjp, delhi, நிவாரண பணிகள், மோடி, பாராட்டு, டில்லி, பா.ஜ.,

புதுடில்லி; கொரோனா ஊரடங்கு காலத்தில், பா.ஜ.,வினர் மேற்கொண்ட மக்கள் நிவாரண பணிகளை, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

கொரோனா பரவலை தடுக்க, மார்ச், 25ம் தேதி முதல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பணம், அத்தியாவசிய பொருட்கள், உணவு உட்பட பல உதவிகள், பா.ஜ., சார்பில் செய்யப்பட்டன. இப்படி, ஊரடங்கு காலத்தில், பா.ஜ., மேற்கொண்ட, மக்கள் நிவாரண பணிகள் பற்றி, பிரதமர் மோடி நேற்று கேட்டறிந்தார். இந்த சந்திப்பில், பா.ஜ.,வினர், தாங்கள் செய்த பணிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, பிரதமரிடம் தெரிவித்தனர்.

அப்போது, பிரதமர் கூறியதாவது:ஆட்சியில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும், பா.ஜ., மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ளும் என்பதை நாம் உணர்த்தியுள்ளோம். எதிர்க்கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களிலும், ஊரடங்கு காலத்தில், பா.ஜ.வினர் மேற்கொண்ட நிவாரண பணிகள் பாராட்டத்தக்கது.நெருக்கடியான நேரத்தில், மக்களுக்கு செய்யும் உதவிகள், ஆண்டவனுக்கு செய்யும் தொண்டை விட சிறப்பானது.இவ்வாறு, பிரதமர் கூறினார்.


latest tamil news



இந்த கூட்டத்தில், பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா பேசுகையில், ''கொரோனா பரவலை எதிர்கொள்வதில், பிரதமர் மோடியின் தலைமையை, உலகம் முழுதும் பாராட்டியுள்ளது. ஊரடங்கு முழுமையாக ரத்து செய்யப்படும் வரை, பா.ஜ., மக்களுக்கு நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
05-ஜூலை-202019:22:42 IST Report Abuse
Raj பி எம் கேர் பணத்தை மக்களுக்கு தரஉம்
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
05-ஜூலை-202010:38:09 IST Report Abuse
Sandru இப்பல்லாம் திருந்திட்டானாம். அப்பிடியா இதை யார் சொன்னது.
Rate this:
Cancel
05-ஜூலை-202009:20:09 IST Report Abuse
தமிழ் இதுதான் சமயம்னு சைடு கேப்ல ஆட்டோ ஓட்றாரு. உண்மையில கொரோனா டைம்ல அரசாங்க ஊழியர்கள் தவிர யாருமே வெளியவே வரல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X