பொது செய்தி

தமிழ்நாடு

பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை : அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களை கவுரவிக்க, சிறப்பு தபால்தலை திட்டத்தை அஞ்சல்துறை அறிமுகம் செய்துள்ளது.latest tamil news
அஞ்சல் உறையில், நாம் விரும்பும் நபரின் படத்தை வைத்துக்கொள்ளும், 'மை ஸ்டாம்ப்' திட்டம், 2014ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு பாஸ்போர்ட் அளவு போட்டோ, 300 ரூபாய் கட்டணமும் செலுத்தினால், ஐந்து ரூபாய் மதிப்புள்ள, போட்டோவுடன் கூடிய, 12 தபால் தலைகள் அடங்கிய அட்டை, ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும்.பள்ளி குழந்தைகள், பெரிய தொழில் நிறுவனங்கள் வரை பலரும், 'மை ஸ்டாம்ப்' பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.


latest tamil news
பிறந்த நாள், திருமண நாள், ஆண்டு விழா போன்ற முக்கிய நிகழ்வுகளை சிறப்பிக்க, இச்சேவையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ஓய்வு பெறும் ஊழியர்களை கவுரவிக்கவும், அவர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும், 'ஹாப்பி ரிடையர்மென்ட்' என்ற, தலைப்பில், தபால்தலை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


latest tamil news
'மை ஸ்டாம்ப்' போலவே, ஐந்து ரூபாய் மதிப்புள்ள தபால் தலையில், ஓய்வு பெறுவோரின் போட்டோவையும், இடம்பெற செய்யலாம்.விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம், என அஞ்சல்துறை அறிவித்து உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
05-ஜூலை-202011:11:18 IST Report Abuse
மலரின் மகள் பாராட்டுக்கள். தபால் துறை அமைதியாக பல சிறப்புக்களை செய்து வருகிறது. ஓவிய பெறுவது குறிப்பாக ஒரே நிறுவனத்தில் பலவருடங்கள் பங்காற்றி இனி நமக்கு அந்த நிறுவனத்துடன் தொடர்பில்லை என்பது அன்பானவர்கள் நம்மை விட்டு பிரிந்து போவது போன்ற ஒரு பெரிய மன உளைச்சல். அந்த ஓய்வு பெரும் கடைசி நிமிடங்கள் வாரங்கள் தரும் மனா சங்கடங்கள் சொல்லி மாளாது. சமுதாயம் தன்போக்கில் இயங்கி கொண்டிருந்தாலும், இனி நாம் சமூகத்திற்கு பயனற்றவர்களாக போய்விட்டோம், நம்மை சங்கம் வேறு விதமாகத்தான் பார்க்கும், குடும்பத்தில் வழக்கம் போன்ற இயல்பு இரா என்று மனம் சஞ்சலமாகவே இருக்கும் தொடர்ந்து. ஓய்வு பெட்ரா முதல் வாரம் மிக முக்கியமானது என்கிறார்கள். மனதை ஓய்வு பெறுவோரும் அவர் இணைந்த சொந்தபந்தங்கள் நட்பு வட்டாரங்கள் அமைதியாக சிறப்பாக்கி தரவேண்டும். ஓய்வு பெறுவதற்கு மனதை பக்குவப்படுத்த வேண்டுமல்லவா? தபால் துறை எடுத்திருக்கும் இந்த சிறப்பான முடிவால், ஓய்வு பெறுவோருக்கு உடன் பணிபுரிவோர் உறவினர்கள் ஹாப்பி ரிடயர்மென்ட் மென்ட் கார்ட் வாங்கி அதை அவருடன் பாகின்ர்ஹு கொள்வதால் தான் கவுரவிக்கப்பட்டதாகவும் சமூகம் தனக்கு அந்தஸ்து வழங்குகிறது ஒரு சிறப்பு வழங்குகிறது என்று எண்ணி மனம் அமைதி பெரும் என்பது நிசிசயம். தபால் துரையின் சேவை மேலும் சிறப்புடையட்டும். பெரும்பாலான அளவில் இதை பயன்படுத்தி திட்டம் சிறப்புற உதவுவோம். மலரில் தேர்ந்தெடுத்து வருகின்ற சில இது போன்று செய்திகள் தொடரவேண்டும்.
Rate this:
Cancel
05-ஜூலை-202009:55:39 IST Report Abuse
rasheed நல்ல சேதி 35 வருடம் பணி செய்து ஓய்வு பெரும் அவருக்கு சிறந்த கவுரவம் குடும்பத்தில் நல்ல மரியாதை கிடைக்கும் விரைவில் பணி ஓய்வோ பெறுவார் பயன் அடைவர்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
05-ஜூலை-202009:47:44 IST Report Abuse
Lion Drsekar இதிலும் சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கும், மேலும் இது ஒரு நல்ல முயற்சியே இல்லை, வியாபாரம் . வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X