பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள்

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

சென்னை; பொது மக்களும், வணிகர்களும், பசி, பட்டினிக்கு ஆளாகாமல் இருக்க, ஊரடங்கிற்கு முடிவு காணும்படி, தமிழக அரசுக்கு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர், ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.



latest tamil news


அவர் விடுத்துள்ள அறிக்கை: ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்து, 100 நாட்களுக்கு மேலாகிறது. இந்த காலத்தில், வணிகர்கள், தொழிற்கூடங்கள், வணிக நிறுவனங்கள் சார்ந்த கூலி தொழிலாளிகள், சுமை துாக்குவோர் என, 80 சதவீத மக்கள் முழுதுமாக பாதிக்கப்பட்டனர். நட்சத்திர ஓட்டல்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என, பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளை முதல், மீண்டும் தளர்வுகளுடன், வணிக நிறுவனங்கள் செயல்பட, அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பு, அரசாணையுடன் மட்டும் நின்று விடாமல், வணிகர் நலனை கருதி, அதிகாரிகளின் அச்சுறுத்தல்கள், அபராதம் போன்றவற்றை தடுத்து, வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, உரிய அறிவுறுத்தல், விழிப்புணர்வுடன் செயல்படுத்த வேண்டும்.


latest tamil news



வணிகர்கள், அவமானங்களுக்கு ஆளாகாமல் தொடர்ந்து, மக்கள் பணியாற்றிடவும், கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக துணை நிற்கவும், உரிய வழிகாட்டுதல்களை, முதல்வர் இ.பி.எஸ்., துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.குறு, சிறு வணிகர்கள், கூலி தொழிலாளர்கள் பசி பட்டினிக்கு தள்ளப்படும் சூழலை கருதி, ஊரடங்கிற்கு முடிவு காணப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
05-ஜூலை-202016:57:29 IST Report Abuse
 Sri,India உயிர் முக்கியமா இல்லை சம்பாத்தியம் முக்கியமா??. சந்தைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளை திறந்தால் நோய் இன்னமும் வேகமாக பரவும். செலவை விக்கிரமறாசா ஏற்றுக்கொள்வார்களா?. சந்தையை திறக்கும் பட்சத்தில் திரை அரங்குகள் திறக்கக் வேண்டும். சாவு இன்னமும் கூடும்.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
05-ஜூலை-202015:13:36 IST Report Abuse
Baskar அந்த இருவர் மரணத்தில் தான் பணம் பார்த்தாய் இப்போது வணிகர்கள் உயிர் முக்கியமா இல்லை சம்பாதிப்பது முக்கியமா என்பதை சொல் . ஸ்டாலின் கொடுத்த காசு அதற்குள் செலவாகி விட்டதா
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
05-ஜூலை-202013:49:05 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan சாத்தான் குளத்தில் செத்தவனுக்கு கடையடத்தீர்களே. அப்பாது மக்கள் நலம் தெரியவில்லையா விக்கிரமராஜாவே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X