கொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி தீவிரம்

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (13)
Share


மயிலாடுதுறை : கொள்ளிடம் ஆற்றில் இருந்து, வீணாக கடலில் தண்ணீர் சென்று கலப்பதை தடுக்கும் வகையில், 396 கோடி ரூபாயில் புதிய கதவணை கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.



latest tamil news




கர்நாடகாவில் மழை, வெள்ளம் ஏற்படும் காலங்களில், மேட்டூர் அணையில் இருந்து, அதிக அளவிலான தண்ணீர் திறக்கப்படும். இதனால், ஏற்படும் வெள்ள சேதத்தை தடுக்க, உபரி நீரானது நாகை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் வழியே கடலுக்கு செல்கிறது.இந்த தண்ணீரை சேகரித்து வைக்க வேண்டும் என்ற, நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில், 2015 ல், கொள்ளிடம் ஆற்றில், நாகை மாவட்டம், குமாரமங்கலத்தில், புதிய கதவணை கட்டப்படும் என, அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்கு, 396 கோடி ரூபாய் நிதி, 2018 ல் ஒதுக்கப்பட்டது. 1,064 மீட்டர் நீளத்திற்கு, 84 மதகுகளுடன் கூடிய புதிய கதவணை கட்டும் பணி நடக்கிறது.இதன் வாயிலாக, 3 மீட்டர் ஆழத்திற்கு, 0.75 டி.எம்.சி தண்ணீரை சேகரிக்க முடியும்.

தற்போது கீழ்தள பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதுவரை, 60 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளதாகவும், பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கதவணை முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு, நாகை மாவட்டத்தில் செயல்படும், 610 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் செயல்படும், குடிநீர் திட்டங்களின் நீர்ஆதாரம் மேம்படும்.


latest tamil news




தெற்கு ராஜன், வடக்கு ராஜன், குமிக்கி மண்ணியாறு போன்ற ஆறுகள் வழியாக, 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கூடுதல் பாசன வசதி பெறும்.வெள்ளம் வரும் காலங்களில், தண்ணீர் வீணாக கடலில் சென்று கலப்பது தடுக்கப்படும். பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ள விவசாயிகள், புதிய கதவணை கட்டும் திட்டத்திற்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X