பொது செய்தி

இந்தியா

தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி; நாட்டிலேயே, முதன் முறையாக, ஜோயா கான் என்ற திருநங்கை, பொது சேவை மையம் மூலம், தொலை மருத்துவ சேவை வழங்கி வருவதற்கு, மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் பாராட்டு தெரிவித்து உள்ளார்.



latest tamil news



ஜோயா கான் உடன் எடுத்த படங்களை, 'டுவிட்டரில்' பதிவேற்றி ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதாவது:குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில், ஜோயா கான் என்ற திருநங்கை, பொது சேவை மையம் மூலம், தொலை துார மருத்துவ சேவையை துவக்கியுள்ளார். இந்தியாவில், முதன் முறையாக, திருநங்கை ஒருவர் இத்தகைய சேவையில் ஈடுபட்டு உள்ளார். அவர், திருநங்கையர் சமூகத்திற்கு, 'டிஜிட்டல்' கல்வியறிவை வழங்கவும், சிறப்பான வாய்ப்புகளை அளிக்கவும், இத்தகைய சேவையில் இறங்கியுள்ளதை பாராட்டுகிறேன்.கொரோனாவால், வர்த்தக நடவடிக்கைகள் மந்தமடைந்துள்ளன; வேலைவாய்ப்பு பிரச்னைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஜோயா கான், தொழில் முனைவோருக்கு உந்துதலை அளிக்கும் வழிகாட்டியாக உருவெடுத்து உள்ளார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


latest tamil news



ஜோயா கான் நடத்தும் பொது சேவை மையத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தொலை துாரத்தில் உள்ள மருத்துவர்களிடம் மருத்துவ ஆலோசனைகள் பெறலாம்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
05-ஜூலை-202013:13:35 IST Report Abuse
Ramesh Sargam வாழ்த்துக்கள் ஜோயா கான் அவர்களுக்கு. உங்கள் சேவை தொடரட்டும்.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
05-ஜூலை-202007:48:53 IST Report Abuse
vnatarajan உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம். அவருடைய செயலை பார்த்து மற்ற திருநங்கைகளும் இதே போன்ற தொழில் துறையில் இறங்குவார்கள் என நம்பலாம். கானுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X