பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமலானது

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
தமிழகம்,தளர்வுகள்இன்றி, முழுஊரடங்கு, அமல், Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, lockdown, curfew

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரிப்பால் தமிழகத்தில் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஜூன் 30 வரை 5 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. 6ம் கட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் ஜூலை 1 முதல் 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது சென்னை மட்டுமல்லாமல் பல மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் ஜூலை மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று அதிகாலை 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil news


முழு ஊரடங்கு இருந்த போதிலும் பால் கடைகள், மருந்துக்கடைகள், பத்திரிகை விநியோகம் ஆகியவை இயங்கி வருகின்றன. முழு ஊரடங்கு நாட்களில் பெட்ரோல் நிலையங்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் தடுப்புக்களை ஏற்படுத்தி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news


சென்னையில் அண்ணா சாலை, காமராஜர் சாலை, பெரியார் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜிவ் காந்தி சாலை ஆகியவை அடைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் போலீசார் ரோந்து மற்றும் டிரோன்கள் மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். ஊரடங்கை மீறி வெளியே வரும் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், அதை ஓட்டி வருபவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக கோவையில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.. முக்கிய இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றன.

மதுரையில் மருந்துகடைகள் மற்றும் பால் விற்பனை நிலையங்கள் மட்டுமே திறந்துள்ளன. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.


வெறிச்சோடிய தென்காசி


தென்காசி மாவட்டம் கடையநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம், புளியங்குடி ,செங்கோட்டை , உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஜூலை-202017:52:33 IST Report Abuse
ஆப்பு மக்கள் நல்லாத்தான் ஒத்துழைக்கிறாங்க. இவிங்கதான் திணறுறாங்க.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
05-ஜூலை-202015:16:44 IST Report Abuse
Visu Iyer டாஸ்மாக் கடைகள் திறந்து இருக்கிறதா.?
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
05-ஜூலை-202014:00:40 IST Report Abuse
g.s,rajan Lock down is mere waste,economy of every one is shattered, common people is suffering a lot in the recent past and lock down is not a remedy.stop the spreading of disease, speed up the vaccine for Corona that is the permanent solution. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X