எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

மூன்று மடங்கு மின் கட்டணம் வசூலிப்பது எதற்கு? தாமத கணக்கெடுப்புக்கு மக்களா பொறுப்பு

Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
மின்கட்டணம், மின்வசாரியம், வீடுகள், கணக்கெடுப்பு,

சென்னை: ஊரடங்கால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், மூன்று மடங்கு மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது. குறித்த காலத்தில், மின் பயன்பாடு கணக்கு எடுக்காததே, இதற்கு முக்கிய காரணம் என்பதால், எந்த விதத்திலும், இதற்கு மக்களைப் பொறுப்பாக்க முடியாது. இதை, அவசர பிரச்னையாக கருதி, தமிழக அரசு, உரிய கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. வீடுகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, ஊழியர்கள், மின் பயன்பாடு கணக்கு எடுக்கின்றனர்.இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மின் பயன்பாடு கணக்கெடுக்க, ஊழியர்கள், நுகர்வோர் வீடுகளுக்குச் செல்லவில்லை. எனவே, முந்தைய மாத கட்டணத்தை செலுத்துமாறும், அது, பின்வரும் கணக்கீட்டில் சரிசெய்யப்படும் என்றும், மின் வாரியம் அறிவித்தது.

இந்நிலையில், கடந்த மாதம், மின் பயன்பாடு கணக்கு எடுக்க, ஊழியர்கள் சென்றனர். அப்போது, மின் வாரிய அறிவுறுத்தலின்படி, பிப்ரவரி முதல் மே வரை, நான்கு மாதங்களுக்கான மின் பயன்பாட்டை மொத்தமாக கணக்கிட்டு, அதை, இரு மாதங்களுக்கு என இரண்டாக பிரித்து, கட்டணம் குறிக்கப்பட்டது.


குமுறும் மின்நுகர்வோர்


அதாவது, இரு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும், 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் முந்தைய மாத கட்டணம் செலுத்தியது போக, மீதி கட்டணத்தை தெரிவித்தனர்.ஆனால், நான்கு மாதங்களுக்கான மின் கட்டணத்தை மொத்தமாக கணக்கிட்டு, அதை இரண்டாகப் பிரித்ததால், மின் கட்டணம் அதிக அளவில் வந்துள்ளதாக, மின் நுகர்வோர் பலரும் குமுறுகின்றனர். வழக்கமான முறைப்படி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுத்து இருந்தால், அதிக தொகை வந்திருக்காது என்றும் தெரிவிக்கின்றனர்.

வழக்கமாக, பிப்ரவரி, மார்ச் மாதங்களில், வெயில் குறைவாக இருக்கும். அதனால், வீடுகளில் மின் பயன்பாடும் குறைவாக இருக்கும். ஏப்., மே மாதங்களில், கோடை வெயில் அதிகம் இருக்கும். அப்போது, மின் தேவை அதிகம் இருக்கும்.மேலும், இந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக, ஏப்ரல், மே மாதங்களில், அனைவரும் வீடுகளில் முடங்கியதால், மின் சாதனங்களின் பயன்பாடு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இருப்பினும், முன்னர் போல, இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாட்டை கணக்கெடுத்திருந்தால், மின் கட்டணம் குறைவான தொகையில் இருந்திருக்கும். நான்கு மாதங்களுக்கு சேர்த்து கணக்கெடுத்து, அதை இரண்டாக பிரித்ததால், பலருக்கும், மின் கட்டணம் மூன்று மடங்கு அளவுக்கு வந்துள்ளது.


கடும் அவதி


உதாரணமாக, ஒரு வீட்டில், பிப்., மார்ச் மாதங்களில், 500 யூனிட் மின் பயன்பாடு இருக்கும் பட்சத்தில், ஏப்., மே மாதங்களில், 1,500 யூனிட் பயன்படுத்தி இருந்தால், அதை, நான்கு மாதங்களுக்கு மொத்தமாக கணக்கெடுக்கும் போது, 2,000 யூனிட் வருகிறது.அதை, இரு மாதங்களுக்கு பிரித்தால், தலா, 1,000 யூனிட்டாகும். இரு மாதங்களுக்கான தலா, 100 யூனிட் இலவச மின்சாரத்தை கழித்தாலும், 500 யூனிட்டிற்கு மேல் செல்வதால், மானிய சலுகை கிடைக்காமல், முழு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இருப்பினும், மூன்று மாதங்களாக, பலரும் வேலைக்கு செல்லாமல், வீடுகளில் முடங்கியுள்ளதால், கையில் பணம் இல்லாமல், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனால், அதிகரித்த மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர்.

எனவே, தமிழக அரசு, மின் கட்டண விவகாரத்தை, அவரச பிரச்னையாக கருதி, மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், அதில் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


கட்டணம் எவ்வளவு?


* வீடுகளுக்கு, மூன்று பிரிவுகளில், மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல் பிரிவில், ஒன்று முதல், 200 யூனிட் வரை, முதல், 100 யூனிட் இலவசம். 101ல் இருந்து, 200 வரை, யூனிட்டிற்கு, 1.50 ரூபாய். அதனுடன், 20 ரூபாய், நிலையான கட்டணம்

* இரண்டாவது பிரிவில், 500 யூனிட் வரை பயன்படுத்தினால், முதல், 100 யூனிட் இலவசம். 101 -- 200 வரை, யூனிட்டிற்கு, 2 ரூபாய்; 201 -- 500 வரை, யூனிட்டிற்கு, 3 ரூபாய். அதனுடன், 30 ரூபாய் கட்டணம்
* மூன்றாவது பிரிவு, 500 யூனிட்டிற்கு மேல். அதில், முதல், 100 இலவசம். 101 -- 200 வரை, யூனிட்டிற்கு, 3.50 ரூபாய்; 201 -- 500 வரை, யூனிட்டிற்கு, 4.60 ரூபாய்; 500 யூனிட் மேல், ஒவ்வொரு யூனிட்டிற்கும், 6.60 ரூபாய். இந்த பிரிவுக்கு, 50 ரூபாய் நிலையான கட்டணம்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
07-ஜூலை-202021:43:32 IST Report Abuse
Tamilnesan இந்த நடைமுறையை திருடர்கள் முன்னேற்ற கழகம் முன்பு செய்தது.
Rate this:
Cancel
rajaram padmanabhan - Chennai,இந்தியா
06-ஜூலை-202011:31:19 IST Report Abuse
rajaram padmanabhan ரீடிங் எடுக்காத மாதங்களுக்கு செலுத்திய பணத்திற்கு பதிலாக அதற்கான ரீடிங்கை வரவு வைத்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது. எனக்கு சாதாரணமாக ஐய்ந்தாயிரம் இரு மாதங்களுக்கு வரும். இப்போது பதினெட்டாயிரம் வந்துள்ளது. செலுத்திய தொகைக்கு பதிலாக ரீடிங் வரவு வந்திருந்தால் அதே தொகைதான் செலுத்த வேண்டியிருக்கும். இப்போது அனாவசியமாக மூன்று மடங்கு செலுத்த வேண்டி இருக்கிறது.
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
05-ஜூலை-202022:56:42 IST Report Abuse
m.viswanathan இந்த தடவையோடு இரு திராவிட கட்சிகளையும் புறக்கணித்தால் அனைத்தும் சரி ஆகி விடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X