பொது செய்தி

இந்தியா

புத்தக அறிமுகம்: ராமானுஜா தி சுப்ரீம் சேஜ்

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

சென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். வாசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம். இந்த வாரம் முதல் ஒவ்வொரு ஞாயிறும் தினமலர் இணையதளத்தில் இந்தப் பகுதி வெளிவரும்.


1. ராமானுஜா தி சுப்ரீம் சேஜ்latest tamil newsஆசிரியர்: ஜே.கே.சிவம்
வெளியீடு: ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி
15, கன்னிகா காலனி, 2வது தெரு,
நங்கநல்லுார், சென்னை - 61.
அலைபேசி: 98402 79080
பக்கம்: 200
விலை: குறிப்பிடவில்லை

அனைத்து மக்களையும் சமமாக எண்ணியவர் ஸ்ரீராமானுஜர். ஒப்பற்ற மனிதநேயத்துடன் வாழ்ந்ததால், 1,000 ஆண்டுகள் கடந்தும், அழியாப் புகழோடு நிலைப்பவர். இவ்வுலகின் எல்லாமும், இறைவன் நாராயணனின் கீழ் இயங்குபவையே எனும் கொள்கை நோக்கில், விசிஷ்டாத்வைத கோட்பாடு அடிப்படையில், வைணவத்தைப் பரப்ப பயணித்தவர். அவரது வாழ்க்கையை புரிந்து கொள்ளும் வகையில், 'RAMANUJA - THE SUPREME SAGE' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நுால்.ராமானுஜரை ஆச்சாரியராக வணங்கும் குடும்பத்தில் பிறந்த, விராக் என்பவர், நுாலாசிரியரின் கனவில் தோன்றி, ராமானுஜரின் வாழ்க்கையை கதையாகக் கூறுவது போல், எளிமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதுாரில், கேசவ சோமயாஜி - காந்திமதி அம்மையாருக்கு பிறந்தவர் ராமானுஜர். நாராயணனின் வில், வாள், சங்கு, சுதர்சனச் சக்கரம், கதாயுதம் ஆகியவற்றின் அவதாரமாகப் பிறந்தவராகவும் கருதப்படுகிறார்.அகிம்சையை கடைப்பிடித்தவர். 'பிறப்பால் அனைவரும் சமம்' எனும் கொள்கை வகுத்து, ஒடுக்கப்பட்டவர்களை பரிவுடன் அரவணைத்து, வழிபாட்டில் புதிய சடங்குகளை உருவாக்கினார். பாகுபாடு கருதாமல் தகுதியை மட்டுமே மதித்து, ஆன்மாக்களை அணுகினார். திருக்கச்சி நம்பியை குருவாக ஏற்றவர். பெரிதும் மதித்த பெரிய நம்பியின் மனைவியை, குலத்தைச் சொல்லி இழித்துப் பேசிய தன் மனைவியையே பிரிந்தவர். எழுபதுக்கும் மேற்பட்ட வைணவ மையங்களை உருவாக்கி, மிகச் சிறந்த சீடர்களை பொறுப்பாளர்களாக நியமித்த திறன், அவரை சிறந்த நிர்வாகியாகப் பார்க்க வைக்கிறது. செயல்பட இயலாத இறுதிக்கட்டத்தை, 120ம் வயதில் உணர்த்துவது வியக்க வைக்கிறது. இறுதி உரையில், 'நிலையில்லா இவ்வாழ்வில், மனிதரிடையே பேதம் செய்யாமல், மனத்தை அலைபாய விடாமல், ஆடம்பர வாழ்வை நாடாமல், எளிமையாக வாழ வேண்டும்' என, அறிவுறுத்திய ராமானுஜரின் வாழ்க்கை, சமூகத்துக்கு ஒரு பாடம். அறக்கடலாக விளங்கியவரின் வாழ்க்கையை கூறும் முறைமை வரவேற்கத்தக்கது. ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு, எளிய கதைகள் மூலம் சொல்லப்பட்டுள்ளது.
- மெய்ஞானி பிரபாகரபாபு


02. இதயம் தொட்ட இலக்கியவாதிகள்ஆசிரியர்: மு.வேலாயுதம்
வெளியீடு: வானதி பதிப்பகம்
தொலைபேசி: 044 - 2434 2810
பக்கம்: 224
விலை: ரூ.175
எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்கள் குறித்து, விஜயா பதிப்பக உரிமையாளர் எழுதியுள்ள நுால். பிரபல எழுத்தாளர் கு.அழகிரிசாமியும், நடிகர் அசோகனும் ஒரே நாளில் மறைந்தனர். ஆனால், நடிகர் மரணம் பற்றி தான் செய்தி வந்தது; இலக்கியவாதியை எவரும் கண்டுகொள்ளவில்லை என, குமுறியுள்ளார். எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றி, 'முறுக்கிய மீசையை பார்த்து கரடு முரடாக நினைத்துக் கொள்வர். ஆனால், அவருக்குள் இருந்த குழந்தை மனசு, பாமரனையும் நேசிக்கும் கனிவு, நெருக்கமாக இருந்தவர்களுக்குத் தான் தெரியும்!' என்று எழுதியுள்ளார்.பதிப்பாளர் சக்தி வை.கோவிந்தன், 1957ல் ஒரு கட்டுரையில், 'ரேசனின் அரிசி, மண்ணெண்ணெய் வாங்க மக்கள் வரிசையில் நிற்பது போல், ஒரு காலத்தில், புத்தகங்கள் வாங்கவும் வரிசையில் நிற்பர்!' என்று சொல்லி இருந்தார். அந்த மாமனிதரின் கனவை ஆச்சரியத்துடன் நினைவு கூர்ந்துள்ளார். சிகரம் தொட்டோரைச் சொல்லும் இலக்கியப் பொக்கிஷம்!
- எஸ்.குரு


03. அருணகிரிநாதரின் அருளானந்தம்


ஆசிரியர்: இரா.சுந்தரேசன்
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
7, தணிகாசலம் சாலை,
சென்னை - 17.
தொலைபேசி: 044 - 2434 2926
பக்கம்: 412
விலை: ரூ.275


latest tamil newsதிருப்புகழுக்கு ஆனந்த அனுபவ உரை எழுதி விளக்கியுள்ள நுால். காமத்தை விரட்டி, குருவாக நின்று ஞானத்தை அறிய வைப்பான் கந்தன் என்பதை, கந்தர் அநுபூதியால் விளக்கியுள்ளார். ஆதிசங்கரர், திருச்செந்துார் கடற்கரையில் செந்தில் ஆண்டவனின் பேருருவைக் கண்டு பாடிய சுப்ரமணிய புஜங்கத்தையும், அதன் மொழியாக்கக் கவிதையும் தந்து காட்சிப்படுத்தியுள்ளார்.தேர்ந்த வடமொழி அறிவும், கவிதை ஆற்றலும், பன்னுால் ஒப்பிலக்கியத் திறனும் கலங்கரை விளக்கமாய் ஒளிர்கிறது. திருப்புகழில், அருணகிரிநாதருக்கும், முருகனுக்கும் உள்ள தோழமையை, கீதை சொன்ன கண்ணன் - அர்ச்சுனன், மாணிக்கவாசகர் - சிவன் நட்புகளோடு ஒப்பிடப்பட்டுள்ளது. மனத்தை உருக்கும் திருப்புகழுக்கு எழுதியுள்ள விளக்கம் அருள் ஆனந்தம் தரும்.
- முனைவர் மா.கி.ரமணன்


04. சக்கரவாளம்


ஆசிரியர்: கணேஷ் வெங்கட்ராமன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.ரோடு,
நாகர்கோவில் - 1.
தொலைபேசி: 04652 - 278525
பக்கம்: 272
விலை: ரூ.325


latest tamil news


Advertisement


பவுத்த சமூகம், தத்துவம், இலக்கியம், வரலாறு என, பல தகவல்களை தொகுத்திருக்கும் நுால். பல நுால்களில் வாசித்த தகவல்களை தொகுத்து கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ளது. சமத்துவத்தை முன் நிபந்தனையாக கொண்டது பவுத்தம். ஒரு கடல் போன்றது. இது தொடர்பாக, பல மொழிகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் முக்கிய புத்தகங்களை வாசிக்கும் முயற்சியாக அமைந்துள்ளது. உள்வாங்கியவற்றை, 50 கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார்.ஜென் கதைகள் சிலவும் உள்ளன. துணுக்கு போன்று அமைந்துள்ள கதை ஒன்று - வாயில் நுரை தள்ளியவாறு அதிவேகமாக ஓடிக் கொண்டிருந்தது குதிரை. அதன் மீது அமர்ந்திருந்தவன் முகம், வெறுமையாக இருந்தது. எந்த வேலையும் இல்லாதது போல் அமர்ந்திருந்தான். அவனிடம், 'எங்கே போகிறாய்...' என்றான் சாலை ஓரம் நின்றவன். 'எனக்கு தெரியாது... குதிரையிடம் கேள்...' என்றான் குதிரைக்காரன். இப்படி சுவாரசியமாக உள்ளது.
- அமுதன்


05. புதிய தமிழ்ச் சிறுகதைகள்


தொகுப்பாசிரியர்: முகிலை இராசபாண்டியன்
வெளியீடு: சாகித்ய அகாடமி,
443, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 18.
தொலைபேசி: 044 - 2431 1741
பக்கம்: 376
விலை: ரூ.300


latest tamil newsதமிழ்ச் சிறுகதைகளையும் காலந்தோறும் தொகுத்து வெளியிடுகிறது சாகித்ய அகாடமி. அந்த வரிசையில், இந்த நுால் நான்காம் தொகுப்பு. பல பகுதிகள் சார்ந்த, 31 கதைகள் இடம் பெற்றுள்ளன. நுாலின் நிறைவுப் பகுதியில், கதாசிரியர்கள் பற்றி சிறுகுறிப்பும் உள்ளது. முன்னுரையில், தமிழ் உரைநடை இலக்கிய வரலாறு தெளிவாக்கப்பட்டுள்ளது.'திற' என்ற சிறுகதையுடன் துவங்கி, சிதைகோழியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் அடையாளப்படுத்துகின்றன. போகி பண்டிகை அன்று பள்ளிக்கு லீவு போட்ட சிறுவனை, வகுப்புக்கு வெளியே நிறுத்தியதற்காகப் பொங்கி எழுந்த பெற்றோர் பற்றிச் சொல்லும் கதை, உயர்ந்த மனிதர்களின் அறமற்ற செயலை உணர்த்தும் கதை, எதற்கும் கோபப்படும் வள்ளம் ஓட்டியின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் கதை என, வகை மாதிரியாக அமைந்துள்ளன. சிறுகதை பிரியர்களின் பார்வையை விரிவடையச் செய்யும் தொகுப்பு நுால்.
- டி.எஸ்.ராயன்


06. எண்ணமே வாழ்க்கையாய்


ஆசிரியர்: டாக்டர் கோ.மணிலால்
வெளியீடு: வசந்தா பதிப்பகம்,
26, குறுக்குத் தெரு, ஜோசப் காலனி,
ஆதம்பாக்கம், சென்னை - 88.
பக்கம்: 160
விலை: ரூ.200
நல்ல எண்ணமே வாழ்க்கையைச் செம்மை செய்யும் என்ற கருத்தில் உதித்த நுால். வாழ்க்கை அறம், புத்தகங்கள், கிராம வாழ்க்கை, மனநலம், வெற்றியின் திறவுகோல், திறமைக்கு ஏற்ப வெற்றி, பயமே தடை, மனித நேயம், சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொள், ஆரோக்கிய வழிமுறைகள் என, பல கருத்துகளை இலக்கிய எடுத்துக்காட்டுகள் தந்து விளக்கி எழுதப்பட்டுள்ளது.
- பேராசிரியர் ரா.நாராயணன்


07. ஸ்ரீநாரத புராணம்


ஆசிரியர்: அபயாம்பாள்
வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை.
அலைபேசி: 94440 47790
பக்கம்: 112
விலை: ரூ.45


latest tamil newsகலகக்காரராக சித்தரிக்கப்படும் நாரதரின் புராணத்தை எளிய நடையில் விவரிக்கும் நுால். பக்தி பனுவலாக கூறப்பட்ட நிகழ்வுகள், சிறு கதைகள் வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளன. உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற உன்னத தத்துவத்தை உணர்த்துகிறது. சிறு தலைப்புகளில், 18 பிரிவுகளாக எழுதப்பட்டுள்ளது. நவரசங்களுடன் உள்ளது. ஆன்மிக நுால்களை படிக்கும் போது, பொறாமை, கோபம், ஆணவம் என்ற துர் பண்புகள் விலகும். இந்த நுாலை வாசிக்கும் போதும் அந்த அனுபவம் கிடைக்கும்.
- கிருஷ்ணவேணி


08. உலகத் தலைவர் அண்ணல் அம்பேத்கர்ஆசிரியர்: குடந்தை பாலு
வெளியீடு: ஜீவா பதிப்பகம்
தி.நகர், சென்னை - 17.
அலைபேசி: 99520 79787
பக்கம்: 152
விலை: ரூ.140


latest tamil newsஅம்பேத்கரின் வாழ்க்கை குறிப்பு பற்றி சுருக்கமாக எழுதப்பட்ட நுால். மூன்று பகுதிகளாக, 22 சிறு தலைப்புகளின் கீழ் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பிறப்பு, இளமை கல்வி என, எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தலைப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. அம்பேத்கரின் வாழ்க்கை சுவடுகள் முழுமையாக, கால வாரியாக சிறு குறிப்புகள் போல், புரியும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய நுால்களும் அதில் அடங்கியுள்ளன. ஏழை குடும்பத்தில் பிறந்து, உலகளவில் உயர்ந்தவரின் காலச்சுவடு.
- விஷ்வா

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
05-ஜூலை-202018:45:23 IST Report Abuse
Nallavan Nallavan மத்வாச்சாரியார் பரப்பிய கொள்கைதான் விசிஷ்டாத்வைதம் ........ அதன் பொருள் விசேஷ அத்வைதம் ....... ராமானுஜர் பரப்பியதோ த்வைதம் ..... இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன ............ விளக்க இங்கே அவகாசமில்லை ........ மேலதிக அறிதலுக்கு இணையத்தை நாடவும் .......... ராமகிருஷ்ண பரமஹம்சர் (மேற்கு வங்கத்தில் வாழ்ந்து மறைந்த மஹான்) அத்வைதம், விசிஷ்டாத்வைதம் இரண்டுமே சரியான கொள்கைகள் என்று அனுபவரீதியாக அறிந்து கூறியுள்ளார் .......
Rate this:
Cancel
Radhakrishnan - Pune,இந்தியா
05-ஜூலை-202018:40:42 IST Report Abuse
Radhakrishnan இந்த பகுதியில் இடம் பெற புதிய நூல்களை யாருக்கு அனுப்ப வேண்டும்? விதி முறைகளை கூறுங்கள்... நன்றி...
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
05-ஜூலை-202018:34:31 IST Report Abuse
Nallavan Nallavan மத்வாச்சாரியார் பரப்பிய கொள்கைதான் விசிஷ்டாத்வைதம் ........ அதன் பொருள் விசேஷ அத்வைதம் ....... ராமானுஜர் பரப்பியதோ த்வைதம் ......... இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன ............ விளக்க இங்கே அவகாசமில்லை ........ மேலதிக அறிதலுக்கு இணையத்தை நாடவும் .......... ராமகிருஷ்ண பரமஹம்சர் (மேற்கு வங்கத்தில் வாழ்ந்து மறைந்த மஹான்) அத்வைதம், விசிஷ்டாத்வைதம் இரண்டுமே சரியான கொள்கைகள் என்று அனுபவரீதியாக அறிந்து கூறியுள்ளார் .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X