அமெரிக்காவில் கொரோனா உச்சம்; நடக்கிறது பேரழிவுக்கு வித்திடும் கொண்டாட்டம்!

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை, 28 லட்சம் பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; 1.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.



latest tamil news




கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில், அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு, வெள்ளை மாளிகையில் ஒரு விழாவினை அதிபர் டிரம்ப் நடத்தி வருகிறார். இதில், கொரோனாவுக்கு எதிராகக் களத்தில் போராடி வரும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் கலந்துகொண்டுள்ளனர். வாஷிங்டனில் நடக்கும் இந்த சுதந்திர தின விழாவில், ராணுவ விமானங்களின் சாகசங்கள், வானவேடிக்கை மற்றும் டிரம்பின் உரை ஆகியவை இடம்பெறுகின்றன.


latest tamil news



இந்த விழாவால், மிகத் தீவிரமாக கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது' என, வாஷிங்டன் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதை மீறி நடக்கும் இந்த விழாவில் பங்கேற்க, வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ''சீனாவிலிருந்து வந்த பயங்கர தொற்று நோயிடம் இருந்து, மிகப்பெரிய வெற்றியை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம்' என, விழா நடப்பதற்கு முன் டிரம்ப் கூறினார்.


latest tamil news



'கடந்த 3ம் தேதி மட்டும் அமெரிக்காவில், 52,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக, புளோரிடா, கலிபோர்னியா போன்ற மாகாண கவர்னர்களால் சுதந்திர தின கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதிப்பைக் கருத்தில் கொள்ளாமல் டிரம்ப் கருத்து தெரிவித்து வருவதும், விழா நடத்தி கூட்டம் சேர்ப்பதும் ஆபத்தத்தின் உச்சம். கூட்டத்தில் பங்கேற்போர் யாரும் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை; முகக் கவசமும் அணியவில்லை. இந்த விழா கொரோனாவால் ஏற்படும் பேரழிவுக்கு வித்திட வாய்ப்புள்ளது' என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
05-ஜூலை-202019:21:07 IST Report Abuse
Raj ஜனநாயகத்தை மதிக்க மாட்டார் டிரம்ப்
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
05-ஜூலை-202017:37:30 IST Report Abuse
Raj டிரம்ப்பால் அமெரிக்கா அழிய போகிறது. இரக்கமற்றவர் ....
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
05-ஜூலை-202016:24:37 IST Report Abuse
தமிழர்நீதி பாவம் அமெரிக்கர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X