பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்?

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (22)
Advertisement
சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானது.இதனையடுத்து அடுத்த இரண்டு மாதம் அந்த குழுவை, போலீஸ் ஸ்டேசன் பணிக்கோ, ரோந்து பணிக்கோ ஈடுபடுத்த வேண்டாம் என அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்களுக்கும், போலீஸ் தலைமையகம் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது. விழிப்புணர்வு
தமிழகம், பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ், சாத்தான்குளம், தந்தை, மகன், போலீஸ், தடை

சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து அடுத்த இரண்டு மாதம் அந்த குழுவை, போலீஸ் ஸ்டேசன் பணிக்கோ, ரோந்து பணிக்கோ ஈடுபடுத்த வேண்டாம் என அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்களுக்கும், போலீஸ் தலைமையகம் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த வேண்டாம் என நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார். இதனையடுத்து, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், அந்த குழுவுக்கு தடை விதிக்கப்பட்டது.
இது போல் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திண்டுக்கல், மாவட்டங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரோந்து, வாகன தணிக்கை மற்றும் கைது போன்ற நடவடிக்கைகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்தக்கூடாது. போலீஸ் நிலையத்திற்குள் அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாய்மொழி உத்தரவாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsவிழுப்புரம் எஸ்.பி., போலீஸ் ஸ்டேசனுக்குள் சென்று பணியாற்ற மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு சமூக பணிகளில் ஈடுபட தடையில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை தமிழகம் முழுவதும் பயன்படுத்த தடை விதிக்கப்படலாம் என்றும் , அந்த குழுவை கலைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


திசை மாறிய அமைப்பினர்போலீஸ் டிஜஜியாக இருந்த பிரதீப் வி பிலிப் என்பவர், பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை உருவாக்க முக்கிய காரணியாக இருந்தார். இவர் வங்கி அதிகாரியாக இருந்து பின்னர் போலீஸ் அதிகாரியானர் . இவர் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், குயின்ஸ் விருதுகள் வாங்கி உள்ளார். மனித நேயத்தின் அடிப்படையில் செயல்படும் இவர் திருநெல்வேலியில் அவர் டிஜஜியாக இருந்தபோது பிரண்ட்ஸ் ஆப் போலீசை வளர்ச்சி பெற செய்தார். இந்த அமைப்பினருக்கு இவர் முக்கியத்துவம் தருவார். தற்போது தமிழ்நாடு சிவில் சப்ளை டிஜிபியாக உள்ளார். துவக்கத்தில் இந்த அமைப்பு நல்ல முறையில் செயல்பட்டு கொண்டிருந்தது. பின்னர் போக, போக தடம் மாறியது. போலீசாருக்கு வசூல் செய்து கொடுப்பது, மேலும் சில உள் குத்து வேலைகளை செய்ய துவங்கினர்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Chinniah - sivagangai,இந்தியா
07-ஜூலை-202019:07:52 IST Report Abuse
Selvaraj Chinniah போலீஸ் டிஜஜியாக இருந்த பிரதீப் வி பிலிப் என்பவர், பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை உருவாக்க முக்கிய காரணியாக இருந்தார். இவர் வங்கி அதிகாரியாக இருந்து பின்னர் போலீஸ் அதிகாரியானர் . இவர் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், குயின்ஸ் விருதுகள் வாங்கி உள்ளார். மனித நேயத்தின் அடிப்படையில் செயல்படும் இவர் திருநெல்வேலியில் அவர் டிஜஜியாக இருந்தபோது பிரண்ட்ஸ் ஆப் போலீசை வளர்ச்சி பெற செய்தார். இந்த அமைப்பினருக்கு இவர் முக்கியத்துவம் தருவார். தற்போது தமிழ்நாடு சிவில் சப்ளை டிஜிபியாக உள்ளார். துவக்கத்தில் இந்த அமைப்பு நல்ல முறையில் செயல்பட்டு கொண்டிருந்தது...., பின்னர்? இந்த ஃபிரென்ட்ஸ் ஆஃப் போலீஸ் இயக்கத்தைத் துவக்கியது முன்னாள் போலீஸ் டிஜிபி பிலிப்.( கிறித்தவர்) இப்போது தலைமை தாங்கி நடத்துவது திரு லூர்துசாமி எனும் கிறித்தவ சேவையாளர் .ஆனால் திராவிஷ சமூக ஊடகங்களில் ஃபிரென்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஒரு ஆர் எஸ் எஸ் சார்பு சேவாபாரதியின் இயக்கம் சாத்தான்குள தாக்குதலில் தொடர்பு எனும் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது . பெரியார் மண்ணாச்சே . எத்தனயோ திமுக ஆதரவு (கிறித்தவ முஸ்லிம் உட்பட ) வாக்காளர்கள் கொரோனா புயல் வெளளம் போன்ற பேராபத்துக் காலங்களில் வேறுபாடு பார்க்காமல் அளித்த உணவை உண்டவர்கள்தான் . நன்றி மறப்பது நன்றன்று. தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்திலும் இவனுக கைவரிசைதான் இருந்திருக்கலாம். நாலு தட்டு தட்டினால் எல்லா உண்மையும் வெளி வரும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடியாள் அமைப்பு. நிர்வாகம் கிறித்தவர்கள் கையில். அமைப்பு துவங்கிய அதிகாரி லஞ்ச லாவண்யத்துக்கு பெயர் போனவர். நீதி விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய அமைப்பு என்று கேள்வி. ஆண்டவனுக்கே வெளிச்சம்.
Rate this:
Cancel
K.Ramakrishnan - chennai,இந்தியா
05-ஜூலை-202019:17:10 IST Report Abuse
K.Ramakrishnan FOP என்பது EXTRA LUGGAGE தான். கொரோனா காலத்தில் வாகன ஓட்டிகளை அடித்ததன் மூலம் போலீசுக்கு பல இடங்களில் கெட்ட பெயர் ஏற்படுத்தியதே இந்த ராசக்கா பாளையங்கள் தான். எனவே அதை முற்றிலும் கலைத்து விடுவதேசிறந்தது.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
05-ஜூலை-202018:12:04 IST Report Abuse
S. Narayanan ஏதாவது உருப்படியான வேலை கொடுக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X