பொது செய்தி

இந்தியா

மஹா.,வில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020
Share
Advertisement
maharastra, corona in maha, coronavirus crisis, covid-19 Maharashtra, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, death, toll, மஹாராஷ்டிரா, மகாராஷ்டிரா, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, பாதிப்பு, தொற்று, பலி, உயிரிழப்பு, போலீஸ்

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது.
இந்தியாவில், கொரோனா பாதித்த மாநிலங்களில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில், 7 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆக அதிகரித்துள்ளது. அதில், 83 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை பெற்ற வருகின்றனர். ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 82 பேர் குணமடைந்தனர். நேற்று ஒரே நாளில் 295 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 671 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news





68 போலீசார் பலி


இந்நிலையில், அங்கு மேலும் 30 போலீசாருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4 போலீசார் இறந்ததால், கொரோனாவால் பலியான போலீசாரின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X