பொது செய்தி

தமிழ்நாடு

" கவனமாக இருங்க., அலட்சியம் வேண்டாம் " - சுகாதாரதுறை செயலர்

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை, சென்னை, மாநகராட்சி, பலி, பாதிப்பு, மண்டல வாரியாக, TN health secretary, Radhakrishnan, warning, Covid-19 cases, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai

இந்த செய்தியை கேட்க

சென்னை: .கொரோனா விவகாரத்தில் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக நடக்கக்கூடாது. நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என சுகாதாரதுறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை போரூரில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஊரடங்கு தளர்வவு காலத்திலும் பொது இடங்களில் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.கொரோனா விவகாரத்தில் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக நடக்கக்கூடாது. நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் பலர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8 லட்சம் பேர் மருத்துவ முகாம்களில் பங்கேற்றுள்ளனர். சென்னையில் உள்ள 39,590 தெருக்களில் தொற்று பாதித்த தெருக்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


சென்னையில் 26 பேர் பலி



latest tamil news




26 பேர் பலி


சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா பாதித்த 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 11 பேர், ஓமந்தூரார், ஸ்டான்லி மருத்துவமனைகளில் தலா 5 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர், தனியார் மருத்துவமனையில் ஒருவர் என 26 பேர் பலியாகியுள்ளனர்.


latest tamil news



சென்னையில் மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையின்படி, சென்னையில் இதுவரை 66,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 41,309 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 1,033 பேர் உயிரிழந்துள்ளனர். 24,195 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் 58.63 சதவீதம் ஆண்களும், 41.37 சதவீதம் பெண்களும் உள்ளனர்.


வயது வாரியாக


9 வயதுக்கு உட்பட்டவர்கள் - 3 சதவீதம்
10 முதல் 19 வயது - 6.90 சதவீதம்
20 முதல் 29 வயது - 18.34 சதவீதம்
30 முதல் 39 வயது - 18.71 சதவீதம்
40 முதல் 49 வயது - 18.75 சதவீதம்
50 முதல் 59 வயது - 16.62 சதவீதம்
60 முதல் 69 வயது - 10.55 சதவீதம்
70 முதல் 79 வயது - 5.35 சதவீதம்
80 வயதுக்கு மேல் - 1.79 சதவீதம்


குணமடைவோர் விகிதம்


சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோர் விகிதத்தில் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 72 சதவீதம் அளவிற்கு குணமடைவோர் விகிதம் உள்ளது. அடுத்தபடியாக தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டையில் தலா 68 சதவீதமும், அண்ணாநகரில் 66 சதவீதமும் குணமடைந்துள்ளனர். மிகக்குறைவான விகிதம் (45 சதவீதம்) உடைய மண்டலங்களாக ஆலந்தூர் உள்ளது.


இறப்பு விகிதம்


கொரோனாவால் உயிரிழந்தோர் விகிதத்தில் மிகக்குறைவான மண்டலமாக சோழிங்கநல்லூர் உள்ளது. அங்கு 0.56 சதவீதம் என்ற ரீதியில் இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது. அடுத்த இடங்களில், வளசரவாக்கம் (1.02), மாதவரம் (1.06), ஆலந்தூர் (1.12), அம்பத்தூர் (1.15), மணலி (1.20) உள்ளன. திருவொற்றியூர் மண்டலமானது அதிக இறப்பு விகிதம் (2.27) கொண்ட மண்டலமாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
05-ஜூலை-202018:57:17 IST Report Abuse
g.s,rajan Statistics are not factual,it is almost fictious. g.s.rajan Chennai a
Rate this:
Cancel
05-ஜூலை-202018:52:56 IST Report Abuse
ஆப்பு இவ்வளவு பேசுறவர் ஒரு 10 நாளக்கி வீட்டில் முடங்கிக் கிடப்பாரா? தினக்கூலிக்கு உழைச்சு சாப்பிடுவாரா? அவனவனுக்கு அவனவன் வாழ்வாதாரம் முக்கியம். வேணும்னா ஆளுக்கு மாசம் 15000 வங்கியில் போட்டுட்டு முடங்கச் சொல்லுங்க.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
05-ஜூலை-202018:06:57 IST Report Abuse
S. Narayanan நிறைய வெட்டிகள் வீணா போன தண்டம்கள் மாஸ்க் அணியாமலேயே நகரத்தில் கும்மி அடிக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X