பொது செய்தி

தமிழ்நாடு

குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
குற்றாலம், சீசன், மெயினருவி, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Rainfall, waterfall, Thirunelveli, Courtallam waterfalls

திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. ஆனால் ஊரடங்கு காரணமாக யாருக்கும் அனுமதி இல்லாததால் அருவி வெறிச்சோடி கிடக்கிறது.

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களும் சீசன் காலம் ஆகும். இந்த காலகட்டங்களில் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, ஆர்ப்பரித்து கொட்டும். சுற்றுலா பயணிகள் வருகை என்பதும் அதிகமாகவே காணப்படும்.


மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்கிறது. குற்றாலம் சீசன் தொடங்கியது. அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. அந்த ஆரவார ஒலி ஊரெங்கும் கேட்கிறது. ஆனால் ஆனந்தமாக குளிப்பதற்கு எவருமே வரவில்லை. கொரோனா மீது குற்றாலம் அருவிகளுக்கும் கோபம் வந்திருக்கும். அதுதான் வழக்கத்தைவிட அதிக இரைச்சலாக எதிரொலிக்கிறது போலும்.

latest tamil news
அதே போன்று இந்த ஆண்டும் சீசன் தாமதமாக துவங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் அதிகாலை முதலே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட துவங்கியது.
தற்போது தமிழக அரசு அறிவித்தபடி சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால் குற்றால அருவி, கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
05-ஜூலை-202019:27:48 IST Report Abuse
Raj பல வியாபாரிகளின் வருமானம் வாழ்வாதாரம் போச்சு
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
05-ஜூலை-202017:58:12 IST Report Abuse
S. Narayanan குற்றாலம் வர நாங்கள் தயார்.
Rate this:
Cancel
Sami Sam - chidambaram ,இந்தியா
05-ஜூலை-202016:19:48 IST Report Abuse
Sami Sam இயற்கையின் அழகு தற்போது இயற்கையோடு இருக்கட்டும் மனிதர்கள் காண ஆசை கொள்ளவேண்டாம் அதுவே நன்மை பயக்கும்
Rate this:
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
05-ஜூலை-202021:56:01 IST Report Abuse
Sundararaman Iyerautorickshaw drivers used to fleece the tourists to the maximum. And hotels and merchants exploited the tourists to the hilt. Now they will realise their folly.................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X