அமெரிக்க, ஆப்ரிக்க நாடுகளில் தெரிந்த சந்திர கிரகணம்

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Lunar Eclipse, Penumbral Lunar Eclipse, America, Eclipse, சந்திர கிரகணம், பெனும்பிலர், கிரகணம், அமெரிக்கா, ஆப்ரிக்கா

வாஷிங்டன்: இன்று (ஜூலை 05) தோன்றிய பெனும்பிரல் (புறநிழல் கிரகணம்) சந்திர கிரகணம், அமெரிக்க, ஆப்ரிக்க நாடுகளில் மிகுதியாக தெரிந்தது.

2020ம் ஆண்டு, ஜனவரி 10 மற்றும் ஜூன் 5ம் தேதிகளில் சந்திர கிரகணத்தையும், ஜூன் 21ல் சூரிய கிரகணத்தையும் கண்டுள்ள இவ்வுலகம், இன்று மீண்டும் சந்திர கிரகணத்தை கண்டுள்ளது. அதிலும் கடந்த ஒரு மாத இடைவெளியில் 3 கிரகணம் நிகழ்ந்துள்ளது. இதனை விஞ்ஞானிகள், வானியல் ஜோதிட வல்லுனர்கள் அரிய நிகழ்வாக கருதுகின்றனர். இன்று நிகழ்ந்த பெனும்பிரல் சந்திர கிரகணம் (புறநிழல் கிரகணம்) என்றழைக்கப்படுகிறது. அதாவது கிரகணத்தின் போது புவியின் நிழல் மட்டுமே நிலவின் மீது விழும்.


latest tamil news


மேலும், இந்த கிரகணத்தின்போது, சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை. கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். புறநிழல் என்பது பூமியின் நிழலின் வெளிப்பகுதியாகும். கிட்டதட்ட 2 மணி நேரம் 43 நிமிடம் 22 நொடிகளுக்கு நிகழும் இந்த கிரகணம், நம் நாட்டில் காலை 8:38 மணிக்கு துவங்கி பகல் 11:21க்கு முடிந்ததது. கிரகணத்தின் போது இந்தியா, அடிவானத்திற்கு கீழே இருப்பதால் நமக்கு பகல் நேரத்தில் தோன்றியுள்ளது. இதனால் நம் நாட்டில் பார்க்க முடியாது.


latest tamil news


சந்திர கிரகணத்தின் அதிகபட்ச கட்டத்தில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவில் வழக்கமான பெளர்ணமியை விட சந்திரன் இருண்டதாக தோன்றியுள்ளது. தெற்கு / மேற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி, வட அமெரிக்காவின் பெரும்பகுதி, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், அண்டார்டிகா ஆகிய இடங்களிலும் தெரிந்துள்ளது. அடுத்த சந்திர கிரகணம் வரும் நவ., 29 மற்றும் 30 தேதிகளில் தோன்ற இருக்கிறது. இது, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட மற்றும் தென் அமெரிக்காவில் தெரியும்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
05-ஜூலை-202016:14:04 IST Report Abuse
Endrum Indian அப்போ சந்திர கிரகணம் 5 ந்தேதி என்பது 4 ஆன் தேதி அமெரிக்காவில் 5 ஆன் தேதி காலையிலா இந்தியாவில்???இது தெரியாமல் நிறைய பேர் இன்றைய ராத்திரி சந்திர கிரகணத்துக்காக காத்துக்கொண்டிருக்கின்றார்கள்???
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-202022:13:52 IST Report Abuse
தல புராணம்In future you can refer to timeanddate dot com website for accurate timing of these celestial events. This is a very good site to learn....
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-202022:25:06 IST Report Abuse
தல புராணம்அமெரிக்காவில் பசிபிக் நேரப்படி (கலிபோர்னியா) ஜூலை 4ம் தேதி, இரவு 8:07 க்கு தொடங்கி, இரவு 9:30 க்கு உச்சத்தை அடைந்து, அதே இரவு 10:52 க்கு முடிந்தது, பூமியின் புறநிழல் விலகியது. இந்த நிகழ்வு நடந்து முடிந்து விட்டது. இந்திய, ஆசிய கண்டங்களில் இது தெரியவில்லை (பாதிப்பில்லை ஹா.. ஹா ). சென்னைக்கு தெரியப்போகும் அடுத்த 5 நிகழ்வுகள் - டைம்-அண்ட்-டேட் பஞ்சாங்கப்படி (1) May 26, 2021 - Penumbral Lunar Eclipse, (2) Oct 25, 2022 Partial Solar Eclipse (3) Nov 8, 2022 Partial Lunar Eclipse, (4) May 5–6, 2023 Penumbral Lunar Eclipse, (5) Oct 28–29, 2023 Partial Lunar Eclipse...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X