பொது செய்தி

இந்தியா

மதபோதகர் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 10 ஆயிரம் பேர்

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (63)
Share
Advertisement
Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Preacher, Funeral, Assam, Villages Sealed, Covid-19, People, மதபோதகர், இறுதிச்சடங்கு, கொரோனா, அசாம்

திஸ்பூர்: அசாமில் ஊரடங்கு உத்தரவை மீறி மதபோதகரின் இறுதிச் சடங்கில் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து, மூன்று கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 6,73,165 பேர் பாதிக்கப்பட்டு, 19,268 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் 10,668 பேர் பாதிக்கப்பட்டு, 14 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், அனைத்திந்திய ஜமாத் உல்மா அமைப்பின் துணைத் தலைவர் கைருல் இஸ்லாம் (87 வயது) கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடைய மகன் அமினுள் இஸ்லாம் எம்.எல்.ஏ.,வாகவும் இருந்துவருகிறார். அவருடைய இறுதிச் சடங்கு ஜூலை 2ம் தேதி நடந்தது. அன்று நடந்த இறுதிச் சடங்கில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.


latest tamil newsகொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறி இத்தனை மக்கள் கலந்துகொண்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில் இத்தனை மக்கள் ஒன்று கூடியது மக்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, காவல்துறை மற்றும் மாவட்ட நீதிமன்றம் ஆகியன தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துளனர். இறுதிச் சடங்கு நடைபெற்ற நாகோன் மாவட்டத்தில் மூன்று கிராமங்களை முழுவதுமாக அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KALIHT LURA - kovilnagaram,இந்தியா
07-ஜூலை-202015:18:34 IST Report Abuse
KALIHT LURA விழுப்புரத்தில் ஒரு ரவுடி கொலை செய்யப்பட்டு அவரது இறுதி ஊர்வலத்தில் 500க்கும் மேல் மக்கள் கலந்து கொண்டதை எந்த தமிழ் நாளிதழும் செய்தியாக போடவில்லை.
Rate this:
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூலை-202012:07:30 IST Report Abuse
Yaro Oruvan சொடலை / குருமா / ஈரமணி / சைக்கோ / கும்யூனிஸ்ட் கும்பல் & கான்+கிராஸ் கும்பல் ... எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
07-ஜூலை-202010:52:19 IST Report Abuse
Tamilnesan நடுநிலைகள் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்? இந்து மத விழாக்கள் என்றால், வரிந்து கட்டிக்கொண்டு பேசும் திரையுலக தீவிரவாதிகள் இதற்கு வாயடைத்து ஜந்துக்கள் போல நிற்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X