பொது செய்தி

தமிழ்நாடு

'யானைகள் இறப்பது இயற்கையானது': வனத்துறை அலட்சியம்

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

கோவை: கொரோனா பெருந்தொற்றால் 2020ம் ஆண்டு மனிதர்களுக்கு சோதனைக் காலமாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு, யானைகளுக்கும் சோதனைக்காலமாக அமைந்துள்ளது.
கேரளாவில் சமீபத்தில், கருவுடன் இருந்த கர்ப்பிணி யானை, அவுட்டுக்காய் வைத்துக்கொடுத்த அன்னாச்சிப் பழத்தை உண்டு உயிரிழந்த சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கியது.
அந்த பாதிப்பிலிருந்து வனவிலங்கு ஆர்வலர்கள் மீள்வதற்குள், தெற்கு ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில், கடந்த இரு மாதங்களில், 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்த செய்தி வந்தது. அதுகுறித்தான் விவாதங்கள் மேலெழுந்த போது, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி பகுதியில், ஒரு பெண் யானை சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


latest tamil news



கோவை மாவட்டத்தில், மூன்று மாதங்களில் மட்டும், 13 யானைகள் உயிரிழந்துள்ளன. கோவையில் யானைகள் அடுத்தடுத்து பலியான விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சிறுமுகை வனச்சரகத்தில் மட்டுமே மூன்று மாதங்களில் எட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. ''10 நாள்களில் 12 யானைகள் உயிரிழந்த சம்பவத்தை எளிதில் கடந்து செல்ல முடியாது. வனத்துறை அமைச்சர் மவுனமாக இருப்பது ஏன்,'' என, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியினார்.


latest tamil news



இதையடுத்து யானைகள் இறப்பு தொடர்பாக வனத்துறையினர் இன்றளித்துள்ள விளக்கத்தில், 'யானைகள் இறப்பு தொடர்பாக, சமூக வலைதளங்களில் வந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது. வனவிலங்குகளின் பிறப்பு, இறப்பு இயற்கையாக நடைபெறும். கோவை வனக்கோட்டங்களில் கடந்த ஆறு மாதங்களில் 14 யானைகள் இறந்துள்ளன. அதில், 13 யானைகள் நோய்த் தாக்குதல் மற்றும் பிற யானைகளுடன் ஏற்பட்ட மோதலால் இறந்துள்ளன. மேட்டுப்பாளையத்தில் பெண் யானையைச் சுட்டுக்கொன்ற கிருஷ்ணசாமி, ராமசாமி ஆகிய இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன' என, கூறப்பட்டுள்ளது.



latest tamil news



'யானைகளின் தொடர் இறப்பைக் குறித்து ஆய்வு செய்து, அதற்குத் தீர்வுகாண வேண்டிய வனத்துறையினர், யானைகளின் இறப்பும் பிறப்பும் இயற்கையானது என அலட்சியமாக தெரிவித்திருப்பது அதிருப்தியளிக்கிறது' என, வனவிலங்கு ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-202022:33:01 IST Report Abuse
தல புராணம் மேட்டுப்பாளையத்தில் பெண் யானையைச் சுட்டுக்கொன்ற கிருஷ்ணசாமி, ராமசாமி ஆகிய இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன - கழுவி ஊத்த எந்த சாங்கி ஆசாமியையும் காணோம்.. மத-வெறி பிடித்த மானங்கெட்ட கூட்டம்..
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
05-ஜூலை-202017:48:06 IST Report Abuse
Lion Drsekar கயவர்களை கைது செய்யக்கூடாது, அடிக்கக்கூடாது, அப்படி இருக்க தேவையா, காவல் துறையினர் படும் பாடு போதாதா, இவர்கள் வேறு தினம் தினம் கூண்டில் நிற்க, இவைகளை எல்லாம் எதுவும் இன்றி சம்பளம் வாங்கினோமா வீட்டுக்கு போனோமா என்று இருப்பதே மேல் என்று முடிவுக்கு வந்து விட்டார்களோ என்னவோ. கேரளாவில் நடந்த சம்பவம் இவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கலாம், இன்றுவரை அந்த செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது, நல்லவேளை அது ஏதாவது ஒரு மதத்தையோ அல்லது ஜாதியையோ சார்ந்திந்துந்தால் அதற்க்கு தகுந்தாற்போல் குரல் எழுப்புவார்கள், தவறு செய்பவர்களை கண்டிக்கவும் முடியவில்லை, தண்டிக்கவும் முடியாத நிலையில் வேறு என்னதான் செய்யமுடியும், வந்தே மாதரம்
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-202022:31:30 IST Report Abuse
தல புராணம்கை அரிச்சு லஞ்சப்புழுக்கை வாங்காமல், யாருக்கும் வளைந்து கொடுக்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலே போதும் ஆப்பீசர்.. ஒன்னியே யாரு அடிக்க சொல்றா? இந்த எழவெடுத்த திமிரு தான் சட்டத்தை பாழாக்கும் முதல் அடி.. பொய்யாக அறிக்கை, பொய்யாக சாட்சி, பிடிச்ச முயலுக்கு மூணு கால்ன்னு திமிர், அடம், சரியான வேலை செய்ய லஞ்சம், திருடர்களுடன் கூட்டு, திருட்டில் பங்குன்னு அழியும் ஆஃபிஸர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் கூட அப்படி தான். அப்படி இருக்கையில் எதுக்கு இந்த போலி தேசபக்தி வேஷமும், வந்தே மாதரமும்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X