பொது செய்தி

இந்தியா

கேரளாவில் 'குவாரன்டீன்' மையத்துக்கு மது சப்ளை; தொற்று உறுதியானதால் கவலை

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
பத்தனம்திட்டா: கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டிவருகின்றன. குறிப்பாக, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் நோய்த் தொற்று பரவுவதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தின் அடூர் நகரத்தை சேர்ந்தவர்,

பத்தனம்திட்டா: கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டிவருகின்றன. குறிப்பாக, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் நோய்த் தொற்று பரவுவதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.



latest tamil news



கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தின் அடூர் நகரத்தை சேர்ந்தவர், கடந்த 3ம் தேதி, துபாயில் இருந்து வந்தார். துபாயிலிருந்து வந்ததால், அவருக்கு கொரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. குவாரன்டீன் பிரிவில், மாடியொன்றில் தனிமைப்படுத்தப்பட்டார்.வந்த இரண்டாவது நாளே அவருக்கு, மது குடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. தன் நண்பர்களை செல்போனில் அழைத்து, மது வாங்கிக் கொடுக்கும்படி கேட்டுள்ளார். நண்பர்கள், மது பாட்டில்களை வாங்கி, மேலிருந்து போடப்பட்ட கயிற்றில் கட்டி அனுப்பியுள்ளனர்.

அனைத்தையும் குடித்த அந்நபர், போதை தலைக்கேறியதும் சத்தம்போட்டு, பிறருக்குத் தொந்தரவாக இருந்துள்ளார். மேலும், தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு திறக்க மறுத்துள்ளார்.இதுகுறித்து அறிந்த போலீசார், கதவை உடைத்து அவரை மீட்டு, பத்தனம்திட்டா மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


latest tamil news



இந்நிலையில் அவரது பரிசோதனை முடிவு வந்தது. அதில், அவருக்குக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால், அவரை மீட்ட போலீசாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


latest tamil news



அவருக்கு மது பாட்டில்களை வாங்கிக் கொடுத்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் என, 20க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் எவெரெஸ்ட்டை முதலில் வென்ற டென்சிங் நார்கேக்கு சார் டீ ன்னானார் நாயர்னு ஒரு கதை
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-202023:18:56 IST Report Abuse
தல புராணம் அளவா குடிச்சிட்டு குப்புறடிச்சி படுத்திருந்தால் பொழுது சுகமாக போயிருக்கும்.. அதை விட்டு, அவ்வளவையும் குடிச்சிட்டு அலப்பறை தேவை தானா ?
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
05-ஜூலை-202022:26:34 IST Report Abuse
Balasubramanian Ramanathan இதைத்தான் நம் தமிழ் தலைவர்கள் கேரளாவை பார்த்து பாடம் கற்க வேண்டும் என சொன்னார்களோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X