பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பில் குழப்பம்: கிலானி ராஜினாமாவால் அம்பலம்

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பு, குழப்பம், கிலானி, ராஜினாமா, அம்பலம், ஹூரியத் அமைப்பு, மோசடி,

ஸ்ரீநகர் ; காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பான , ஹூரியத் மாநாடு அமைப்பிலிருந்து விலகுவதாக சையத் அலி ஷா கிலானி அறிவித்தார். இதன் மூலம் பாக்., மருத்துவ கல்லூரி மோசடி மற்றும் அந்த அமைப்பில் நிலவும் நிழல்யுத்தம் ஆகியவற்றை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பான, அனைத்து கட்சி ஹூரியத் மாநாட்டு அமைப்பில் வாழ்நாள் தலைவராக இருந்த சையத் அலி ஷா கிலானி, சில நாட்களுக்கு முன்னர், அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது, அந்த அமைப்பின் பிரதிநிதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை தெரிவித்தார். மேலும், அடுத்த தலைவராக அப்துல்லா கிலானி செயல்படுவார் எனக்கூறினார்.கிலானியின் அறிவிப்பில், அமைப்பு ரீதியாக விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளதன் மூலம், மருத்துவ கல்லூரி முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாகிஸ்தான் அதிபராக முஷாரப் இருந்தது முதல், காஷ்மீரை சேர்ந்த மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் பாகிஸ்தானில் இடம் ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு வரை, பாகிஸ்தானில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர், இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் லாகூரில் உள்ள கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டது. அவர்களுக்கு ஆகும் செலவை பாகிஸ்தான் அரசு ஏற்று கொண்டதுடன், இட ஒதுக்கீடு குறித்து ஹூரியத் அமைப்பை பயன்படுத்தி வந்தது. அவ்வாறு அங்கு படித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், கடந்த வாரம் வாகா எல்லை வழியாக வந்து, தற்போது அமிர்தசரசில் தங்கியுள்ளனர். தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 2018 ம் ஆண்டு காஷ்மீரை சேர்ந்தவரும், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முன்னாள் உறுப்பினருமான அப்துல்லா கிலானி என்பவர், காஷ்மீர் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் பொறியியல் கல்லூரிகளில் முறைகேடு நடப்பதாகவும், பாகிஸ்தானில் செயல்படும் ஹூரியத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த குலாம் முகமது சபி, காஷ்மீர் மாணவர்களுக்கான சீட்களை விற்று வருவதாக குற்றம்சாட்டினார்.

இவர், டில்லி பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய எஸ்ஏஆர் கிலானியின் சகோதரர் ஆவார். எஸ்ஏஆர் கிலானிக்கு,2001 ல் நடந்த பார்லிமென்ட் தாக்குதலில் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சபி கூறுகையில், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். இதற்கு ஆதாரம் இல்லை. நிரூபிக்கப்படும் வரை அது குற்றச்சாட்டு தான் எனக்கூறினார்.

கடந்த ஆண்டு பிரிவினைவாத அமைப்பு தலைவர்களான கிலானி மற்றும் மிர்வாயிஸ் இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக, நிச்சயமற்ற தன்மை நிலவியதால், கடந்த ஆண்டு காஷ்மீரில் இருந்து எந்த மாணவர்களும் பாகிஸ்தான் செல்லவில்லை.கிலானியின் பேத்தியும் பாகிஸ்தானில் மருத்துவ படிப்பு படித்து வந்தார். ஆனால், முறைகேடு புகார் எழுந்ததை தொடர்ந்து, காஷ்மீர் மாணவர்களை பரிந்துரைப்பதை நிறுத்திவிட்டார்.


latest tamil newsஇது தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் தொடர்புடைய மாணவர்கள் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், என்ஐஏ விசாரணை துவங்குவதற்கு முன்னரே, ஹூரியத் அமைப்பில் பெரிய பிரச்னையை கிளப்பியது. இதனால், கிலானி ,ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து சபியை நீக்கியதுடன் அப்துல்லா என்பவரை நியமித்தார். ஆனாலும், இது மற்றொரு பிரச்னையை ஏற்படுத்தியது. அவருக்கு ஹூரியத் அமைப்பின் மற்ற தலைவர்கள் மற்றும் பாகிஸ்தான் அரசின் ஆதரவும் கிடைக்கவில்லை. இதனால், குழப்பம் நிலவியது.

இதனை கண்டுகொள்ளாமல், கிலானி உத்தரவுப்படி சபி மீதான குற்றச்சாட்டுகளை அப்துல்லா விசாரிக்க துவங்கினார். ஆனால், இதனை கண்டுகொள்ளாத சபி, தனக்கு பாகிஸ்தான் அமைப்புகளின் ஆதரவு உள்ளதாக கூறினார். மேலும் அவர், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியதால், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஹூரியத் அமைப்பின் குழப்பம் ஏதும் ஏற்படாது. எங்களுக்குள் கருத்துே வறுபாடு இல்லை. நான் டெக்ரிக் இ ஹூரியத் அமைப்பின், பிரதிநிதி. அந்த அமைப்பு ஹூரியத் அமைப்பில் அங்கம் வகிக்கவில்லை. இதனால், ஹூரியத் அமைப்பின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. நான் டெஹ்ரிக் இ ஹூரியத் அமைப்பின் தலைவர் அஷ்ரப் ஷெராயிக்கு மட்டுமே விஸ்வாசமாக இருப்பேன் எனக்கூறினார்.இதனால் அங்கு, மற்றொரு அதிகார மையம் உருவாகியது.

அஷ்ரப் ஷெராயி மகன் ஒரு பயங்கரவாதி. சமீபத்தில், காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். மேலும்,கிலானிக்கு பிறகு ஹூரியத் மாநாட்டின் தலைவர் பதவியில் அமர அஷ்ரப் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால், அப்துல்லாவை நியமித்து கிலானி உத்தரவிட்டார்.அதேநேரத்தில் பாகிஸ்தானுடனான அப்துல்லாவின் உறவு மோசமடைந்து வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ல் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர், இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கிலானியின் குரலாக அப்துல்லா பேசி வந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

அதேபோல், ஹிஸ்புல் முஜாகிதீனின் தலைவன் சையத் சலாஹூதீனும், பாகிஸ்தான் அமைப்புகளின் மவுனம் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். ஹிஸ்புல் அமைப்பின் நெருக்கடி காரணமாக கூட கிலானி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கலாம் என பாகிஸ்தானில் ஒரு தகவல் வெளி வருகிறது. காஷ்மீரில் தலைவர்கள் கைதாகி காவலில் இருந்த நிலையில், சில தலைவர்கள் எப்படி அதில் இருந்து தப்பித்தார்கள். அவர்கள் ஏன் மவுனமாக உள்ளனர் என சலாஹூதீன் கேள்வி எழுப்பினார். கிலானியும், இதே கவலையை தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக சலாஹூதீன் பாகிஸ்தானில் ஓரங்கட்டப்பட்டு வருகிறார். ஜெயிஸ் இ முகமது மற்றும் லஷ்கர் பயங்கரவாத அமைப்புகளை முன்மாதிரியாக கொண்டு பாகிஸ்தானில் மற்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டது, ஹிஸ்புல் அமைப்புக்கு பின்னடைவாக கருதப்பட்டது என தெரிவித்தனர்.

அதேநேரத்தில் ஸ்ரீநகரில் உள்ள ஹூரியத் அமைப்பின் மற்ற தலைவர்கள், கிலானியின் ராஜினாமா கடிதத்தின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்புவதுடன், அவர் கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் திரித்து கூறப்பட்டவை என தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், கிலானியை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது வீட்டுக்காவலில் உள்ள கிலானியை சந்திக்க, அவரது வீட்டில் பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. அவரது தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால், யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்தனர்.முசாராபாத்தில் உள்ள ஹூரியத் அமைப்பினர், அப்துல்லாவை, கிலானி நியமிக்கவில்லை. அப்துல்லா மகன் நயீம் தான் நியமித்தார் என தெரிவித்தனர்.

ஆனால், அதனை மறுத்த அப்துல்லா, ஹூரியத் அமைப்பினருக்கு கிலானி கடிதம் எழுதியுள்ளார். 2018 ல் கிலானி தான் ஷபியை பதவியில் இருந்து நீக்கினார். இதனால், என்னை குறித்தும், நயீம் குறித்தும் ஷபி பொய் பிரசாரம் செய்து வருகிறார். ஹூரியத் அமைப்பின் கூட்டத்தின் போது, நிர்வாகிகளிடம் என்னை நியமித்தது குறித்து கிலானி தெரிவித்தார். அவருடன் நான் தினமும் பேசி வருகிறேன். காஷ்மீர் நிர்வாகம் தான் அவரை காவலில் வைத்துள்ளது. அவரை சந்திக்கவும் யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கிலானி மகன் நயீம் கூறுகையில், எனது தந்தை தான் அப்துல்லாவை நியமித்தார். பேசுவதற்கு அவருக்கு மட்டுமே அங்கீகாரம் உள்ளதாக தெரிவித்தார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எந்த மீடியாவுடனும் எனது தந்தை பேசவில்லை. எந்த மீடியாவுடனும் பேச போவதில்லை என முடிவு செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், கடந்த 3 ம் தேதி முஷாபராபாத் நகரில் இருந்து அப்துல்லா வெளியேற்றப்பட்டதுடன், அவர் வகித்த ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஹூசைன் முகமது கதீப் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்திற்கு காஷ்மீரில் உள்ள ஹூரியத் அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுவும் கிலானியின் ராஜினாமாவுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு அப்துல்லாவை பிடிக்காவிட்டாலும், கிலானி தொடர்ந்து வலிமைமிக்கவராகவே கருதுகின்றனர். அவர் தனது பதவி விலகலை விலக்கி கொள்வார் என தெரிவித்தன.

அதேநேரத்தில் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், தலைமை பதவிக்கு யாரையும் ஆதரிக்க போவதில்லை. பிரிவினைவாத அமைப்பு தலைவர் பதவி குறித்து கவலைப்பட்டது போதும். அந்த அமைப்பில் குழப்பம் நீடித்தால், நல்லது தான். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
08-ஜூலை-202013:40:09 IST Report Abuse
NicoleThomson பாவம் ஏழை பாழைகள், இது போன்ற பணக்கார முஸ்லிம்களின் பகடைகளாக ஆகிவிட்டார்களோ?
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
05-ஜூலை-202022:28:59 IST Report Abuse
Nagarajan D மோடி அரசாங்கத்தால் தீவிரவாதிக்கு இனி தீவிரவாதம் செய்ய முடியவில்லை அதனால் ராஜினாமா? இவனை சுட்டு கொள்ள வேண்டும்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
06-ஜூலை-202006:00:44 IST Report Abuse
 Muruga Velஇவனை சுட்டு தள்ள வேண்டும் ......
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
05-ஜூலை-202021:27:37 IST Report Abuse
Rasheel சேர்க்க வேண்டிய சொத்தை சேர்த்தாச்சு. டெல்லி லண்டனில் பல பங்களா. ஆனால் ஏழை காஷ்மீரி பள்ளிக்கூடம் செல்லக்கூடாது. மற்ற இந்தியர்கள் காஷ்மீர்இல் குடியேற முடியாது. எழுபது ஆண்டுகளாக நடந்த செகுலர் அநியாயங்களை நினைத்தா கோபம் வருது. என்ன ஆட்டம் போட்டானுக? எப்படி காஷ்மீர் மட்டும் மேல் உலகத்தில் வந்ததாக போட்ட நாடகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X