பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.11 லட்சமாக உயர்வு; பலி 1,510 ஆனது

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020
Share
Advertisement
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 05) புதிதாக 4,150 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆகவும், பலி எண்ணிக்கை 1,510 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,077 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 73 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 95 ஆய்வகங்கள் (அரசு-49 மற்றும் தனியார் 46) மூலமாக, இன்று மட்டும் 34,831 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 13 லட்சத்து 41 ஆயிரத்து 715 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


latest tamil news


இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,481 பேர் ஆண்கள், 1,669 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 68,085 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 43,044 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 2,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 778 ஆக உள்ளது.


வயது வாரியாக பாதிப்பு

இன்று மட்டும் கொரோனா பாதித்த 60 பேர் உயிரிழந்தனர். அதில், 17 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,510 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 44,956 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 5,489 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 92 ஆயிரத்து 248 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 13 ஆயிரத்து 414 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X