பொது செய்தி

இந்தியா

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்கா - இந்தியா இடையே 36 விமானங்கள் இயக்கம்

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஜூலை 11 முதல் 19 வரை 36 சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்கவுள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தினால் விமானங்கள் மற்றும் கப்பல்கள்

புதுடில்லி : வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஜூலை 11 முதல் 19 வரை 36 சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்கவுள்ளது.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தினால் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலமாக லட்சக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பல கட்டங்களாக ஒவ்வொரு நாடுகளுக்கு மிடையில் சிறப்பு விமானங்களை அரசு இயக்குகிறது. இந்நிலையில் 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கும் இடையே ஜூலை 11 முதல் ஜூலை 19 வரை 36 விமானங்களை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது : வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 4 வது கட்டமாக இந்தியா, அமெரிக்காவிற்கு விமான சேவையை மீண்டும் செயல்படுத்துகிறது. விமான சேவை குறித்து ஜூலை 6 முதல் முன்பதிவு செய்யலாம். கொரோனா தொற்று பாதிப்புகளையடுத்து, அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை ஏற்றிச் செல்லும் ஏர் இந்தியாவின், 'ஏர் இந்தியா' திருப்பியனுப்பும் விமானங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஏர் இந்தியாவை இயக்குவதற்கு தடையின்றி தடை விதித்ததாக, அமெரிக்காவின் போக்குவரத்து துறை அறிவித்தது.


latest tamil newsதொடர்ந்து, வந்தே பாரத் திட்டத்தின் 4 வது கட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமான சேவை மூலம், 170 நாடுகளை இந்தியாவுடன், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், கென்யா, பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா, கிர்கிஸ்தான், சவுதி அரேபியா, ரஷ்யா, வங்காளதேசம், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மியான்மர், ஜப்பான், உக்ரைன் மற்றும் வியட்நாம் இணைக்கிறது. இந்தியா மே.,25 முதல் உள்நாட்டு விமான சேவையை துவங்கியது. ஆனால் சர்வதேச விமான சேவை இன்னும் துவங்கப்படவில்லை. மேலும் சர்வதேச விமான சேவை ஜூலை 31 வரை நிறுத்தப்படும் என சிவில் விமான போக்குவரத்து துறை (DGCA) அறிவித்தது. சர்வதேச விமானத்தை மீண்டும் தொடங்குவதற்கான சரியான நேரம், விமானங்களை பெற திறந்திருக்கும் மற்ற நாடுகளை பொறுத்தது.


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-202023:34:24 IST Report Abuse
தல புராணம் மற்ற வெளிநாட்டு விமான நிறுவனங்கள் (லுப்தான்சா, பிரிட்டிஷ் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்று அரசுசார் நிறுவனங்கள்) இந்த பணியில் தாங்களும் பங்கேற்க எவ்வளவோ முறை முயன்றும் இந்திய அரசு அனுமதி தராமல் கட்டணக் கொள்ளை அடிப்பது வருந்தத்தக்கது.. அவர்களுக்கு சம்மதம் தராமல் ஜூலை 1, ஜூலை 15, அப்புறம் ஜூலை 31, என்று இழுத்தடிக்கிறது.. விமான எரிபொருட்களின் விலை 35% குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் கூட, ஒருவழி பயணத்திற்கு கட்டணமாக, போக-வர ஆகும் கட்டணத்தை போல ஒன்னரை மடங்கு வரை விலையேற்றி, ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கிறவன் பையில் இருந்து மனசாட்சியில்லாமல் பிக்பாக்கெட் அடிக்கிறது.. தவிக்கும் மக்களும் வேறு வழி இன்றி பல்லைக் கடித்துக்கொண்டு இதில் வருகின்றனர். கொரோனாவால் வேலையில்லாமல் பணமில்லாமல் தவிக்கும் நாட்டு மக்களிடம் பெட்ரோல் விலையை தினமும் ஏற்றி சுரண்டும் ஆட்சியாளர்களின் எண்ணப்போக்கே மக்களை துன்புறுத்தி சுரண்டுவது தானா?
Rate this:
Cancel
05-ஜூலை-202020:03:25 IST Report Abuse
rasheed மிகவும் சந்தோசமா இருகேன் என் மகன் துபாய் உள்ளான் அவனை அழைத்து வரணும் டென்ஷன் ஆக உள்ளது பணம் ஆசையா அனுப்பி இபோது கஷ்டம் என்ன வந்தே பாராட் திட்டம் கை கொடுக்கவேனும் இனி வெளி நாடு அனுப யோசிச்சு அனுப்பனும்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
05-ஜூலை-202019:36:49 IST Report Abuse
Lion Drsekar வரவேற்கப்படவேண்டிய ஒன்று, இன்னமும் பலர் அங்கும் இங்குமாக எங்குமே நகர முடியாமல் தவிக்கின்றனர், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X