பொது செய்தி

இந்தியா

கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
கொரோனா,கட்டுப்பாடுகள்,கேரளா முடிவு

திருவனந்தபுரம்: கொரோனாவை தடுக்கும் கட்டுப்பாடுகளை அடுத்தாண்டு ஜூலை வரை கடைபிடிக்க வேண்டும் என கேரள அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தினமும் சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அறிகுறி இல்லாமல் தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்கள் உள்ளனர். இதனால், கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மாநில அரசு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் அடுத்த ஒராண்டு அல்லது அரசின் உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சிலருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், பொது மக்கள் பாதிக்கப்படாமல், இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதுஎன தெரிவித்துள்ளது.


latest tamil news



அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:
* சமூக இடைவெளி: பொது இடங்களில் அனைவரும் 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்
* வாகனங்கள், பொதுஇடங்கள், வழிபாட்டு தலங்களில் அனைவரும் வாய் மற்றும் மூக்கை மூடும் வகையில் மாஸ்க் அணிய வேண்டும்
* அரசின் அனுமதியில்லாமல்,யாரும் ஒரே இடத்தில் கூடக்கூடாது. தர்ணா, போராட்டம், போன்றவைக்கு தடை விதிக்கப்படுகிறது. முக்கியமான நிகழ்ச்சிகளில் 10 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அவர்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி மற்றும் சானிடைசர் பயன்படுத்துவது கட்டாயம்.
* திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளில் 50க்கு மேல் பங்கேற்க கூடாது. பங்கேற்கும் அனைவரும் மாஸ்க், சானிடைசர் அணிவதுடன், சமூக இடைவெளி கடைபிடிப்பது கட்டாயம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சானிடைசர் வழங்க வேண்டும்.
* இறுதிச்சடங்கில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தால், அரசு வகுத்த சிறப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்.
* கொரோனா உள்ளதாக சந்தேகப்படும் நபர் இறந்தாலும், அவர்களுக்கும், கொரோனாவால் இறக்கும் நபருக்கு கடைபிடிக்கப்படும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
*வணிக நிறுவனங்களில் ஒரே நேரத்தில் 20 பேருக்கு மேல் இருக்கக்கூடாது. அங்கு சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன், வாடிக்கையாளருக்கு, கடை உரிமையாளர் சானிடைசர் வழங்க வேண்டும்.
* பொது இடங்கள், சாலைகள், நடைபாதைகளில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவசர சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஜூலை-202004:44:03 IST Report Abuse
 ஜெய் ஸ்ரீ ராம் யாரும் சபரிமலை, கேரளா டூர் எல்லாம் போயிடாதீங்கபா. சுற்றுலா வந்த வெள்ளக்காரன்களை அடித்து விரட்டிய ஊர் அது. வெளி மாநிலம் / வெளி நாட்டுல வந்தவன் எல்லாம் ஏன்டா வந்தோம் ன்னு புலம்புறாங்க. தனிமைப்படுத்துறேன் பேர்வழி ன்னு சொந்த பந்தங்களே மோசமாக நடத்துகிறார்கள். எல்லா ஊர்லயும் 2 மீட்டர் தான் சமூக இடைவெளி. அங்க 1 கி.மீ தள்ளி போறானுங்க. அந்த ஊர் செய்திகள படிங்க. ஒதுக்கப்படும் மக்களின் துயரம் அதிகம்.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
05-ஜூலை-202022:21:38 IST Report Abuse
Balasubramanian Ramanathan ஆஹா கேரளானா கேரளாதான்.மக்களை மையமாக வைத்து செயல்படுகிறார்கள்
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
05-ஜூலை-202022:00:59 IST Report Abuse
sundarsvpr அரசு சொல்படி மக்கள் கடைபிடிப்பர். மக்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. பிராத்தனைக்கு பலனும் உண்டு.ஜனநாயக நாட்டில் பெர்ம்பான்மையான மக்கள் வேண்டுகோளை செவிமடுத்து அரசு ஏன் யாகம் செய்யக்கூடாது. ஒரு தோற்று கிருமி பல உயிர்களை கொல் கிறது. அதுபோல் நல்லவர் ஒருவருக்காக கார் மேகம் கொட்டுவது போல் உள்ளம் கனிந்த ஒருவர் பிராத்தனைக்கு நல்ல பலன் கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X