கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (3)
Share
கொரோனா,கட்டுப்பாடுகள்,கேரளா முடிவு

திருவனந்தபுரம்: கொரோனாவை தடுக்கும் கட்டுப்பாடுகளை அடுத்தாண்டு ஜூலை வரை கடைபிடிக்க வேண்டும் என கேரள அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தினமும் சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அறிகுறி இல்லாமல் தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்கள் உள்ளனர். இதனால், கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மாநில அரசு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் அடுத்த ஒராண்டு அல்லது அரசின் உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சிலருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், பொது மக்கள் பாதிக்கப்படாமல், இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதுஎன தெரிவித்துள்ளது.


latest tamil news



அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:
* சமூக இடைவெளி: பொது இடங்களில் அனைவரும் 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்
* வாகனங்கள், பொதுஇடங்கள், வழிபாட்டு தலங்களில் அனைவரும் வாய் மற்றும் மூக்கை மூடும் வகையில் மாஸ்க் அணிய வேண்டும்
* அரசின் அனுமதியில்லாமல்,யாரும் ஒரே இடத்தில் கூடக்கூடாது. தர்ணா, போராட்டம், போன்றவைக்கு தடை விதிக்கப்படுகிறது. முக்கியமான நிகழ்ச்சிகளில் 10 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அவர்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி மற்றும் சானிடைசர் பயன்படுத்துவது கட்டாயம்.
* திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளில் 50க்கு மேல் பங்கேற்க கூடாது. பங்கேற்கும் அனைவரும் மாஸ்க், சானிடைசர் அணிவதுடன், சமூக இடைவெளி கடைபிடிப்பது கட்டாயம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சானிடைசர் வழங்க வேண்டும்.
* இறுதிச்சடங்கில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தால், அரசு வகுத்த சிறப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்.
* கொரோனா உள்ளதாக சந்தேகப்படும் நபர் இறந்தாலும், அவர்களுக்கும், கொரோனாவால் இறக்கும் நபருக்கு கடைபிடிக்கப்படும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
*வணிக நிறுவனங்களில் ஒரே நேரத்தில் 20 பேருக்கு மேல் இருக்கக்கூடாது. அங்கு சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன், வாடிக்கையாளருக்கு, கடை உரிமையாளர் சானிடைசர் வழங்க வேண்டும்.
* பொது இடங்கள், சாலைகள், நடைபாதைகளில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவசர சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X